
நெய்வேலியில் “மாஸ்டர்” பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது, அதிரடியாக நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் விஜய்யிடம் மடக்கி, மடக்கி விசாரணை நடத்தினர். அதிலும் திருப்தி இல்லாமல் வாங்க போகலாம்... என வண்டியில் ஏற்றி வந்து, பண்ணை வீட்டில் வைத்து விடிய, விடிய விசாரணை நடத்தினர். செய்யறதை எல்லாம் செஞ்சிட்டு, விஜய் வீட்டில் இருந்து சல்லி காசு கூட கிடைக்கலை என வந்த வழியாக நடையை கட்டினர்.
இதையெல்லாம் ஒருவழியாக சமாளித்த விஜய், மாஸ்டர் பட ஷூட்டிங்கை வெற்றிகரமாக முடித்துவிட்டு, ஆடியோ லாஞ்சுக்காக காத்திருக்கிறார். லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடும் இடத்தில், ஐ.டி. ரெய்டு பின்னணி என்ன என குட்டி கதையை அவிழ்த்துவிட்டு, எல்லோரையும் தெறிக்கவிடலாம் என கனவு கண்டு கொண்டிருந்தார். அதற்காக முதலில் நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆடியோ லாஞ்சை வைக்கலாம் என முடிவெடுத்தார்களாம். ஆனால் கொரோனாவை காரணம் காட்டி அரசு தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டவலை மட்டும் கட்டிக்கொண்டு கவர்ச்சி போஸ்... எல்லை மீறும் யாஷிகா ஆனந்த்...!
அதன் பின்னர் தான் சரி... இருக்கவே இருக்கு நம்ம சன் டி.வி., ஆடியோ ரிலீஸை லீலா பேலஸில் வைக்கிறோம். குட்டி ஸ்டோரிய லைவ்-ல சொல்லுறோம் என படக்குழுவும் அதிரடி முடிவெடுத்துவிட்டது. நடிகர் விஜய்க்கு ரெய்டுக்கு அடங்கிவிட்டார் என்று பார்த்தால், சன் டி.வி.யில் லைவ் வச்சியிருக்காங்களே. அப்போ ஏதோ சிக்கல் என ஊகித்தவர்கள், மீண்டும் ரெய்டை கட்டவிழ்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள்... திரும்ப சின்னத்திரைக்கே போயிடுறேன்... புலம்பும் பிரபல நடிகை...!
இதற்கு எல்லாம் காரணம் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், ஐ.டி. ரெய்டு குறித்து விஜய் மாஸ்டர் ஆடியோ லாஞ்சில் பதிலளிப்பார் என்று சொன்னது தானாம். சிவனேன்னு விஜய் அவர் உண்டு, அவரோட வேலை உண்டு என அமைதியாக இருந்தாலும் அவருடைய அப்பா வாண்டடாக போய் வம்பிழுத்து வருகிறார் என தளபதி ஃபேன்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.