"எனக்கு அசல் தான் வேணும்"... இளம் முன்னணி நடிகரை வம்பிழுக்கும் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி...!

By Kanimozhi Pannerselvam  |  First Published Mar 13, 2020, 5:11 PM IST

அப்படி ஸ்ரீரெட்டி நடத்தி வரும் அட்டாக்கில் டோலிவுட்டின் இளம் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா சிக்கியுள்ளார். 


ஆந்திராவில் சர்ச்சையை கிளப்பிவிட்டு தமிழகத்தில் மையம் கொண்டது ஸ்ரீரெட்டி எனும் கவர்ச்சி புயல். திரையுலகில் பட வாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு வா என பேரம் பேசுகிறார்கள் எனக்கூறி பரபரப்பு கிளப்பினார். அதையடுத்து டோலிவுட்டில் வாய்ப்பு தருவதாக கூறி என்னை சீரழித்தார்கள் எனக்கூறி, நானி, கொரட்டலா சிவா, பவன் கல்யாண், ராணா தம்பி அபிராம் டக்குபதி ஆகியோரை அசிங்கப்படுத்திய ஸ்ரீரெட்டி, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சீரஞ்சிவி குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: டவலை மட்டும் கட்டிக்கொண்டு கவர்ச்சி போஸ்... எல்லை மீறும் யாஷிகா ஆனந்த்...!

கோலிவுட்டிலும் ராகவா லாரன்ஸ், விஷால், ஸ்ரீகாந்த், இயக்குநர்கள் சுந்தர் சி, ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் மீது பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். இடை, இடையே எப்படியாவது பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக ஹாட் போட்டோஸ்களையும் வெளியிட்டு வருகிறார். கவர்ச்சி புகைப்படங்கள் கைகொடுக்காததால், தற்போது ஸ்ரீரெட்டி கையில் எடுத்துள்ள புது பாணி செம்ம வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள்... திரும்ப சின்னத்திரைக்கே போயிடுறேன்... புலம்பும் பிரபல நடிகை...!

அதாவது தனது முகநூல் பக்கத்தில் பிரபலங்கள் குறித்து டபுள் மீனிங் பதிவுகளை போட்டு அள்ளு தெறிக்கவிடுகிறார். அப்படி ஸ்ரீரெட்டி நடத்தி வரும் அட்டாக்கில் டோலிவுட்டின் இளம் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா சிக்கியுள்ளார். விஜய் தேவரகொண்டா பற்றி தனது முகநூல் பக்கத்தில் கமெண்ட் செய்துள்ள ஸ்ரீரெட்டி, நாங்கள் உங்களை மிகவும் விரும்புகிறோம், நீங்கள் ரன்வீர் சிங்கை காப்பியடிக்க தேவையில்லை. எங்களுக்கு ஜெராக்ஸ் வேண்டாம்... அசல் தான் வேண்டும் என்று கமெண்ட் செய்துள்ளார். 
 

click me!