
சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி, தன்னுடைய ஆடி காரை சீரியல் மேலாளர் உள்பட சிலர் அடித்து சேதப்படுத்தியதாக, கோயம்பேடு காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். தெலுங்கு, தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறி அதிர வைத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி.
திரைப்பட வாய்ப்பு தருவதாக, தன்னை பயன்படுத்தி கொண்டு பட வாய்ப்பு தராமல் ஏமாற்றி விட்டனர் என்றும் தனக்கு நியாயம் வேண்டும் என தெலுங்கு பிலிம்சேம்பர் முன்பு அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு மீடியாக்களின் பார்வையை ஈர்த்தார்.
பின் தன் பக்கத்தில் உள்ள நியாயத்துக்காக படாத பாடு பட்டும் இவரை தெலுங்கு திரையுலகம் கண்டுகொள்ளாததால், சென்னையில் வந்து செட்டில் ஆகி உள்ளார்.
சென்னைக்கு வந்து இறங்கியதுமே பல மீடியாக்களில் சுழன்றடித்து பேட்டி கொடுத்தார், தமிழ் நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சந்தீப் கிஷன், மற்றும் ஏஆர் முருகதாஸ், சுந்தர் சி போன்ற இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இவர் கூறியதை, தமிழ் ரசிகர்கள் பெரிதாக கண்டு கொள்ளாததால், தன்னுடைய சுயசரிதையை படமாக ரெட்டியின் டைரி என்கிற பெயரில் படமாக எடுத்து, அதில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தன்னுடைய உயர் ரக ஆடி காரை, சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்பில் நடத்திவரும் சிலர் சேதப்படுத்தி விட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பிரபல சீரியல் தயாரிப்பு மேலாளர் மீதும் ஸ்ரீரெட்டி புகார் அளித்துள்ளார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட கோயம்பேடு காவல் துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.