
‘லஞ்ச ஒழிப்புத்துறையில் டைரக்டர் ஆகிட்டேன். இனிமேதான் இருக்கு கச்சேரி...’ என்று முழங்கி வந்த நடிகை மீரா மிதுனின் பதவி, வந்த வேகத்தில் வழுக்கிக் கொண்டு ஓடிவிட்டது.
உங்க மேல மோசடி புகார்கள் இருப்பதால் பதவி பிடுங்கப்படுகிறது என்று கூறிவிட்டது அதே துறை! அவருக்கு பதிலாக வேறொரு மருத்துவரை நியமித்துவிட்டார்கள். கொடுமை என்னவென்றால் இந்த பதவியை வைத்துக் கொண்டு மிட்டாயை கூட கடிக்க முடியாது என்பதுதான்.
இந்த லட்சணத்தில் இந்த பதவி போச்சே என்று கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டாராம் மீரா மிதுன். நடுவில் அக்னி சிறகுகள் படத்தில் இவரை நடிக்க வைக்கலாம் என்று நினைத்த மூடர் கூடம் நவீன், இவரது நடவடிக்கைகள் பிடிக்காமல் அந்த எண்ணத்தை போட்டு முழுங்கிவிட்டார். முதலில் அப்ரோச் செய்தார்கள் அல்லவா? அந்த எரிச்சலில் நவீனையும் நைய புடைத்து வருகிறார் மிதுன்.
இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு குலுங்க குலுங்க அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மீரா மிதுனை வார்த்தைகளால் திட்டித்தீர்த்து வருகிறார்கள். அதில் ஒருவர், இது பெஸ்டிவல் மோடா? இல்லை ஃபர்ஸ்ட் நைட் மூடா? எனக் கேட்டு அதிரடித்திருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.