
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ,தமிழ்நாட்டு மக்கள் மனதில் ஏற்படுத்திய தாக்கங்கள் இப்போது தான் ஓய்ந்திருக்கிறது இந்நிலையில், மீண்டும் பிக் பாஸ்-2 நிகழ்ச்சி விரைவில் வெளி வரவிருக்கிறது. இந்த முறை எந்த பிரபலங்களின் தலை எல்லாம் இந்த நிகழ்ச்சியில் உருளப்போகிறதோ? என தமிழகமே ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறது.
சமீபத்தில் கூட பிக்பாஸ்-2 பிரமோ வெளியாகியது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதில் கலந்துகொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? யார்? என்பது பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. ஆனாலும் பிக் பாஸ் பரபரப்பு மட்டும் இப்போதே தொடங்கிவிட்டது. இதற்கு அடையாளமாக நடிகை ஸ்ரீ பிரியா ஒரு டிவீட் செய்திருக்கிறார். சென்ற முறை பிக் பாஸ் குறித்து தனது கருத்துக்களை பதிவு செய்தது போல இம்முறையும் பதிவு செய்யவா என தன் நண்பர்களிடம் அதில் கேட்டிருக்கிறார் ஸ்ரீ பிரியா.
சென்ற முறை பிக் பாஸ் நிகழ்ச்சியை, கடுமையாக விமர்சித்த பிரபலங்களில் இவரும் ஒருவர் .ஸ்ரீபிரியா பிக் பாஸ் மட்டுமல்ல பிற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், நியாயமான முறையில் விமர்சிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.