நடிகை தான்யாவிற்கு ஏற்பட்ட இழப்பு...! சோகத்தின் உச்சத்தில் குடும்பத்தினர்...!

 
Published : May 14, 2018, 12:27 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
நடிகை தான்யாவிற்கு ஏற்பட்ட இழப்பு...! சோகத்தின் உச்சத்தில் குடும்பத்தினர்...!

சுருக்கம்

actor ravichanthiran son death

தமிழ்த் திரைப்படங்களில் 1960கள் மற்றும் 70களில் முன்னணி கதாநாயகனாகவும் பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன்.

நடிகர் என்பதையும் தாண்டி, மானசீக காதல், மந்திரன் உள்பட 7 படங்களை இயக்கினார். அதே போல் தமிழ், மலையாளத்தில் சில படங்களை சொந்தமாக தயாரித்தார். 

இப்படி திரைத்துறையில் பல்வேறு திறமைகளோடு விளங்கிய நடிகர் ரவிசந்திரனுக்கு, ஷீலா மற்றும் விமலா என இரு மனைவிகள் இருந்தனர். ஷீலாவிடம் இருந்த விவாகரத்து பெற்ற பெண் விமலாவை கைப்பிடித்தார்.

மேலும் இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் லாவண்யா என்கிற ஒரு மகள் உள்ளார். தற்போது இவருடைய மூத்த மகன் பாலாஜி (தொழிலதிபர்) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார்.

இவருக்கு வயது 50, கடந்த சில வருடமாக சிறுநீரக பாதிப்பால் அவதி பட்டு வந்த இவரை, குடும்பத்தினர் பிரபல தனியார் மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சையளித்து வந்தனர். இந்நிலையில் பாலாஜி சிகிச்சை பலனின்று இன்று காலமானார். 

இவர் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான தான்யா ரவிச்சந்திரன்னின் பெரியப்பா... தன்னுடைய பெரியப்பா மேல் மிகுந்த பாசம் வைத்திருக்கும் தான்யாவிற்கு இது மிகப்பெரிய இழப்பு என்று கூறப்படுகிறது. மேலும் இந்த துயர சம்பவத்தால் நடிகர் ரவிசந்திரன்னின் குடும்பவே சோகத்தில் மூழ்கியுள்ளது. மேலும் பிரபலங்கள் பலர் இவர்களை தொடர்புக்கொண்டும், நேரில் சந்தித்தும் ஆறுதல் கூறி வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடிகை நிதி அகர்வால் மீது கைவச்சது யார்? அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்
தங்கமயிலின் அதிரடி முடிவு! - அம்மாவை நம்பினால் வேலைக்காது வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா; நீதி கிடைக்குமா?