மகளின் முதல் பிறந்தநாள் வீடியோவை வெளியிட்ட நடிகை சினேகா..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!

Published : Jan 25, 2021, 01:00 PM IST
மகளின் முதல் பிறந்தநாள் வீடியோவை வெளியிட்ட நடிகை சினேகா..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!

சுருக்கம்

நடிகை சினேகா - பிரசன்னா நட்சத்திர ஜோடி, தங்களுடைய மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

நடிகை சினேகா - பிரசன்னா நட்சத்திர ஜோடி, தங்களுடைய மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சினேகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம், அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதனை நடிகரும், சினேகாவின் கணவருமான பிரசன்னா மிகவும் மகிழ்ச்சியோடு தை மகள் வந்தாள் என ட்விட்டரில் பதிவிட்டு தெரிவித்தார்.

ஏற்கனவே சினேகா - பிரசன்னா தம்பதிக்கு 5 வயதில் விஹான் என்கிற மகன் இருக்கும் நிலையில், பெண் குழந்தை பிறந்துள்ளதால் இருவருமே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். குழந்தையை கவனித்து கொள்வதற்காக, சினேகா எந்த படத்திலும் நடிக்காமல் உள்ளார். 

மேலும் கர்ப்பமாக இருந்த போது இவர் நடித்த 'பட்டாஸ்' திரைப்படத்தில், அடிமுறை பயிற்சி கற்று நடித்ததற்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்தது. குழந்தை பெற்றுக்கொண்டதால், உடல் எடை கூடி காணப்பட்ட சினேகா, கடின உடல் பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தார்.

அவ்வப்போது, உடல்பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டு வந்தார் சினேகா. இந்நிலையில், சினேகா - பிரசன்னா மகள் ஆதந்த்யாவின் முதல் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாட பட்டுள்ளது. இந்த பிறந்தநாள் வீடியோவை தற்போது நடிகை சினேகா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ராசிகள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சரத்குமார் உடனான காதல் முறிவுக்கு பின்... திருமணமே செய்யாமல் முரட்டு சிங்கிளாக வாழும் நடிகை..!
அடேய் விடுங்கடா... கூட்டத்தில் சிக்கிய அனிருத்; அலேக்காக தூக்கிச்சென்ற பவுன்சர்கள் - வைரல் வீடியோ