
1990-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். குறுகிய காலத்திலேயே அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னனி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பாப்புலர் ஆன சிம்ரன், தனது தங்கை மோனலையும் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக களமிறக்கிவிட்டார்.
கடந்த 2000-ஆம் ஆண்டில் வெளியான பார்வை ஒன்றே போதுமே படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் மோனல். முதல் படத்திலேயே இவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன. இதில் இடம்பெறும் ‘திரும்பிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு’ என்கிற பாடல் இன்றளவும் கொண்டாடப்படுகிறது என்றால், அதற்கு முக்கிய காரணம் அதில் இடம்பெறும் நடிகை மோனலின் நடனம் தான்.
இதையடுத்து விஜய்க்கு ஜோடியாக பத்ரி படத்தில் நடித்த மோனல், கடந்த 2002-ம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. 21 வயதிலேயே நடிகை மோனல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது ரசிகர்களையும், நடிகை சிம்ரனையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், நடிகை மோனலின் 20-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நடிகை சிம்ரன் தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது: “இப்போது நீ என்னோடு இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாம் எப்போதும் ஒன்றாக இருக்கிறோம் என்பது எனக்கு தெரியும். 20 வருடங்கள் ஆனாலும் நீ என்னுள் ஒரு அங்கமாக இருந்து வருகிறாய். எப்போதும் உன்னை மிஸ் பண்றேன் மோனு” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... சிம்பிளாக நடந்து முடிந்தது ஆலியாபட் - ரன்பீர் கபூர் திருமணம்! இணையத்தை கலக்கும் காதல் ஜோடியின் கல்யாண போட்டோஸ்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.