
நடிகரை சுருதி ஹசன் அமெரிக்க தொலைக்காட்சியில் ஒரு தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அமெரிக்க நாவலாசிரியர் உருவாக்கிய ஒரு கற்பனை கதாபாத்திரம் தான் ஜேசன் பார்ன். இந்த கதையின் படி,சிஐஏ என்ற உளவு அமைப்பு இயங்கி வருகிறது. இந்த உளவு அமைப்பின் மிக முக்கிய வேலையே பல ஏஜென்ட்களை உருவாக்கி அவர்களை பலம் பொருந்திய நபர்களாக மாற்றுகிறது.
இந்த ஏஜென்ட்கள் அனைவரும் பல மடங்கு திறமை வாய்ந்தவர்களாகவும், மற்றவர்களை சாதாரணமாக கொல்லும் திறனும் கொண்டவர்கள். சிஐஏ சொல்லும் நபர்களை தீர்த்துக்காட்டுவதே இந்த ஏஜென்ட்கள் செய்யும் முக்கிய வேலை.
அப்படிப்பட்ட சூழலில், ஆபரேஷன் டிரெஸ்டோன் என்ற நடவடிக்கை என்பதனை மையமாக வைத்து யுஎஸ்ஏ தொலைக்காட்சியில் டிரெஸ்டோன் தொடர் உருவாகிறது. இந்த தொடரின் நடிகை ஸ்ருதி ஹாசன் டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில், சாதாரண பணிபெண்ணாக வேலை பார்த்தபடியே ஏஜென்ட்டாக செயல்படும் நீரா படேல் என்ற காதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதற்கு முன்னதாக, ஜேசன் பார்ன் கதாபாத்திரத்தில் இதுவரை 5 திரைப்படங்கள் வெளியாகி உலக அளவில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது. இந்த அறிய வாய்ப்பு மூலம் ஸ்ருதி ஹாலிவுட்டில் சவாலான நபராக மாற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.