44 வயதில் இரண்டாவது குழந்தைக்கு தாயான ஷில்பா ஷெட்டி..! குழந்தையின் பெயருக்கு இப்படி ஒரு அர்த்தமா..?

Published : Feb 22, 2020, 12:06 PM ISTUpdated : Feb 22, 2020, 12:12 PM IST
44 வயதில் இரண்டாவது குழந்தைக்கு தாயான ஷில்பா ஷெட்டி..! குழந்தையின் பெயருக்கு  இப்படி ஒரு அர்த்தமா..?

சுருக்கம்

நடிகர் பிரபு தேவா நடித்த மிஸ்டர் ரோமியோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரபல பாலிவுட் நடிகை, ஷில்பா ஷெட்டி.  

நடிகர் பிரபு தேவா நடித்த மிஸ்டர் ரோமியோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரபல பாலிவுட் நடிகை, ஷில்பா ஷெட்டி.

இந்த படத்தை தொடர்ந்து தமிழில் இவர் கதாநாயகியாக நடிக்க வில்லை என்றாலும், தளபதி நடிப்பில் வெளியான 'குஷி' படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். மேலும் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார்.

தற்போது 44 வயதாகும் இவர், கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜ் குந்ரா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே, வியான் என்கிற 8 வயது மகன் உள்ள நிலையில், தற்போது இவருக்கு இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது... "ஓம் ஸ்ரீ கணேஷய நம, 
எங்கள் பிரார்த்தனைகளுக்கு ஒரு பதில் கிடைத்துள்ளது.
அதற்கு இதயம் கனிந்த நன்றி....
எங்கள் சின்ன தேவதையின் புதிய வருகை பற்றி அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

அவருக்கு சமிஷா ஷெட்டி என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், 
பிப்ரவரி 15, 2020 தேதி அன்று  தங்களுடைய வீட்டில் ஜூனியர் எஸ்.எஸ்.கே. பிறந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் சமஸ்கிருதத்தில் ‘சா’ என்பது “வேண்டும்”, என்கிற அர்த்தத்தை குறிப்பதாகவும், ரஷ்ய மொழியில் ‘மிஷா’ என்பது “கடவுளைப் போன்ற ஒருவரை” குறிக்கிறது. என தன்னுடைய குழந்தையின் பெயருக்கு அர்த்தம் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்மேலும் செய்திகள்: எந்தக்கடையில அரிசி வாங்கினாங்களோ..? பேரழகியாய் இருந்த 'டூயட்' நாயகி மீனாட்சியா இது? புலம்பும் 80 'ஸ் கிட்ஸ்..!

தன்னுடைய குழந்தைக்கு, அனைவருடைய ஆசிர்வாதமும் வேண்டும் என்றும் இதனால் பரவசமான பெற்றோர்என ராஜ் மற்றும் ஷில்பா ஷெட்டி குந்த்ரா என பெயரை குறிப்பிட்டுள்ளார். அதே போல் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த சகோதரர் என வியான் ராஜ் குந்த்ரா பெயரை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நண்பா இது நம்ம சர்க்கார்... தவெக பொதுக்கூட்டத்தில் கவனம் ஈர்த்த அஜித் பேனர் - வைரலாக்கும் தல - தளபதி ரசிகர்கள்
நான் அவள் இல்லை... காட்டுத்தீ போல் பரவிய ஏஐ போட்டோ - கடும் கோபத்தில் நிவேதா தாமஸ் வெளியிட்ட பதிவு