உரசி உராய்ந்து... கட்டித் தழுவி விரகதாபத்தை தூண்டும் ஷாலு ஷம்மு... ஏக்கப்பெருமூச்சு விட வைக்கும் வீடியோ..!

By Kanimozhi Pannerselvam  |  First Published Feb 22, 2020, 3:40 PM IST

மகாசிவராத்திரியான நேற்று ஆண் நண்பருடன் கவர்ச்சி வெறியாட்டம் ஆடியுள்ள ஷாலு ஷம்முவின் வீடியோ சோசியம் மீடியாவில் வைரலாகி வருகிறது. 


சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்". அந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் சூரிக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருந்தார். அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். தொடர்ந்து சினிமாவில் துணை நடிகையாக நடித்து வரும் ஷாலு ஷம்மு, சமீப காலமாக சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Tap to resize

Latest Videos

அந்த வகையில், தற்போது ஷாலு ஷம்மு இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில், கதாநாயகிகளில் ஒருவராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. துணை நடிகையில் இருந்து நடிகை அளவிற்கு புரோமோட் ஆனாலும் கவர்ச்சிக்கு தடை போடாமல் இன்ஸ்டாகிராமில் தனது அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் ஷாலு ஷம்மு. முன்னணி நடிகைகள் கூட ஹாட் போட்டோ ஷூட்டில் அடக்கி வாசிக்கும் போது, ஷாலு ஷம்முவின் அட்ராசிட்டிகளோ எல்லை தாண்டி போய்க்கொண்டிருக்கிறது. 

இதையும் படிங்க: "பிகில்" பாண்டியம்மாளா இது?.... ஸ்டன்னிங் மார்டன் லுக்கில் அசத்தும் புகைப்படங்கள்...!

பட வாய்ப்பிற்காக நாளுக்கு நாள் ஆள் மாறிவரும் ஷாலு ஷம்மு, பிக்பாஸ் மீராமிதுனுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு மாறியுள்ளார். அரைகுறை ஆடையில் ஆண் நண்பர்களுடன் கவர்ச்சி குத்தாட்டம், ஹாட் போட்டோ ஷூட் என அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். பட வாய்ப்பிற்காக ஷாலு ஷம்மு செய்யும் வேலைகள் நெட்டிசன்களை செம கடுப்பாக்கியுள்ளது. 

காதலர் தினத்தன்று உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாமல், ரோஜா இதழ்கள் மூடிய படி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய ஷாலு ஷம்மு. அதை தனது இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைச் செய்தார்.  

இதையும் படிங்க: சும்மா கெத்தா.. செம்ம ஸ்டைலா... ஐதராபாத் விமான நிலையத்தை கலக்கிய நயன்தாரா..!

இந்நிலையில் மகாசிவராத்திரியான நேற்று ஆண் நண்பருடன் கவர்ச்சி வெறியாட்டம் ஆடியுள்ள ஷாலு ஷம்முவின் வீடியோ சோசியம் மீடியாவில் வைரலாகி வருகிறது. கண்கள் கூசும் படியான ஷாலு ஷம்முவின் நடனத்தை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள் அவரை கண்டபடி திட்டி வருகின்றனர். 

இதை எல்லாம் பார்த்துட்டு யாராவது டான்ஸ் கிளாஸுக்கு போவீங்களா என நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர். மேலும் சிலரோ சொல்லவே முடியாத வார்த்தைகள் கண்டபடி கமெண்ட் செய்து வருகின்றனர். 
 

click me!