7 மணிக்கு தயாரா இருங்க! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆர்யா மனைவி சாயிஷா!

Published : Mar 26, 2020, 05:27 PM IST
7 மணிக்கு தயாரா இருங்க! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆர்யா மனைவி சாயிஷா!

சுருக்கம்

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதனால் மக்கள் அனைவரும் வெளியில் வரவேண்டாம் என மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளது.  

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதனால் மக்கள் அனைவரும் வெளியில் வரவேண்டாம் என மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளது.

பலர் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அதேபோல் சிலர் வீட்டில் இருந்து வேலை செய்து வருகிறார்கள்.

எந்நேரமும் துறுதுறுவென காணப்பட்ட பலருக்கும், வீட்டில் முடங்கி உள்ளது சலிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் எப்படி பொழுதை கழிப்பது என புலம்பி வருபவர்களும் ஒரு பக்கம் உள்ளனர்.

இந்நிலையில் நடிகையும், ஆர்யாவின் மனைவியுமான சாயிஷா, தன்னுடைய ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் இன்று  7 மணிக்கு ரசிகர்களுடன் சாட் செய்ய உள்ளதாக கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

வனமகன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சாயீஷா, சூர்யாவுடன் காப்பான், கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், ஆர்யாவுடன் கஜினிகாந்த், போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

 இவருடைய நடிப்பில் விரைவில் 'டெடி'  திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  சமந்தாவிற்கு பிறகு திருமணத்திற்கு பிறகும் திரையுலகில் சாய்ஷாவும் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஏழையா சாவேனே தவிர, ஏழையா வாழ மாட்டேன்! குடும்பத்தின் கஞ்சத்தனத்தை வறுத்தெடுத்த டாப்ஸி!
Rashmika Mehendi: தேவதை போல் ராஷ்மிகா.. மாஸ் காட்டும் விஜய்! வைரலாகும் மெஹந்தி பங்ஷன் போட்டோஸ் - ரசிகர்கள் குஷி!