இங்கிலாந்து இளவரசருக்கு கொரோனா பரப்பினாரா பாடகி கனிகா கபூர் ?... வைரலாகும் பகீர் போட்டோ...!

By Kanimozhi Pannerselvam  |  First Published Mar 26, 2020, 4:37 PM IST

இந்நிலையில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு பாலிவுட் பாடகி கனிகா கபூர் கொரோனா வைரஸை பரப்பியதாக சோசியல் மீடியாவில் வதந்தி பரவி வருகிறது. 


உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இங்கிலாந்து இளவரசர் சார்லஸையும் விட்டு வைக்கவில்லை. கனடா பிரதமரின் மனைவி சோபி ட்ரூடியோ, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோர் கொரோனாவால் தாக்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து இளவரசர் சார்லஸும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: 

அரசியல் கட்சி தலைவர்கள், ஹாலிவுட் பிரபலங்கள் என பலரையும் தொற்றிய கொரோனா வைரஸ், பாலிவுட் பாடகி கனிகா கபூரை பாடாய்படுத்தி வருகிறது. லண்டனில் இருந்து மும்பை வந்த கனிகா கபூருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர் அதை மறைத்து பார்ட்டி, பொது நிகழ்ச்சிகள் என சகட்டு மேனிக்கு சுற்றி மற்றவர்களுக்கும் கொரோனாவை பரப்பியதாக புகார் எழுந்துள்ளது. 

இதையும் படிங்க: “இதுதான் என் கடைசி போட்டோ”... கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்டு தலைமறைவான சனம் ஷெட்டி...!

இந்நிலையில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு பாலிவுட் பாடகி கனிகா கபூர் கொரோனா வைரஸை பரப்பியதாக சோசியல் மீடியாவில் வதந்தி பரவி வருகிறது. இவர்கள் இருவரும் சந்தித்து கொண்டது போன்ற புகைப்படம் ஒன்றும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: கொரோனாவின் கோர தாண்டவம்... குவியும் சவப்பெட்டிகளால் திணறும் இத்தாலி... எங்கு திரும்பினும் மரண ஓலம்.....!

ஆனால், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் உடன் பாலிவுட் பாடகி கனிகா கபூர் இருக்கும் இந்த புகைப்படங்கள், சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள் இல்லை என்றும், இவை 2015ம் ஆண்டு எடுத்த பழைய புகைப்படங்கள் என்றும் சம்பந்தப்பட்டோர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. 
 

click me!