உடலமைப்பை கிண்டல் செய்த நெட்டிசன்கள்... நடிகை சனுஷாவின் செம்ம பதிலடி..!

Published : Jun 12, 2021, 03:46 PM IST
உடலமைப்பை கிண்டல் செய்த நெட்டிசன்கள்... நடிகை சனுஷாவின் செம்ம பதிலடி..!

சுருக்கம்

உடல் எடையை கூடுவதும், குறைப்பதும்... அவரவர் தனி பட்ட விஷயம். அப்படி இருக்கையில் நடிகை சனுஷா வெளியிட்ட புகைப்படத்தில் அவரது உடல் அமைப்பை பார்த்து கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளதற்கு பலரும் இவரை பாராட்டி வருகிறார்கள்.  

உடல் எடையை கூடுவதும், குறைப்பதும்... அவரவர் தனி பட்ட விஷயம். அப்படி இருக்கையில் நடிகை சனுஷா வெளியிட்ட புகைப்படத்தில் அவரது உடல் அமைப்பை பார்த்து கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளதற்கு பலரும் இவரை பாராட்டி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: எம்.ஜி.ஆர் கையில் தூக்கி வைத்திருக்கும் இந்த முன்னணி நடிகர் யார் தெரியுமா?
 

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மாறியவர் சனுஷா. தமிழிலும் நடிகர் விக்ரம் நடித்த 'காசி' படத்தில் சிறிய வயது லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மலையாளம், தெலுங்கு, தமிழ் என அடுத்தடுத்து பிசியாக குழந்தை நட்சத்திரமாகவே  நடித்து வந்த இவரை ஹீரோயினாக உயர்த்தியது... 'ரேணி குண்டா' திரைப்படம் தான். இதை தொடர்ந்து தமிழில் நந்தி, எத்தன், உள்ளிட்ட படங்களிலும் ஹீரோயினாக நடித்தார்.

இவர் ஹீரோயினாக நடித்த சில படங்கள் வெற்றிபெற்ற போதிலும், இவரால் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி இடத்தை பிடிக்கமுடியவில்லை. எனவே விதவிதமான புகைப்படங்களை போட்டு படவாய்ப்புகளை தேடி வருகிறார் சனுஷா. அதிலும் இவர், சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவான நபர் என்பதால், எங்கு சென்றாலும் அதனை புகைப்படமாக எடுத்து வெளியிடுவார்.

மேலும் செய்திகள்: நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா? ரசிகர்களை ஆச்சர்யடுத்திய பிறந்தநாள் புகைப்படம்..!
 

இவர் கொஞ்சம் எடை கூடி காணப்படுவதால், சனுஷாவின் உடல் தோற்றத்தை வைத்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கிண்டல் செய்து வந்துள்ளனர். இதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக இவர் போட்டுள்ள பதிவு ஒன்றில்... கூறியுள்ளதாவது. " யாரெல்லாம் என் உடல் எடையை பற்றி என்னைவிட அதிகமாக கவலைப்படுகிறார்களோ அதைக்குறித்து பேசுகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று அவசியமில்லை. என்னை சுட்டி காட்டி பேசும் எல்லோரும் ஒன்றை மனதில் வைத்து கொள்ளுங்கள். நீங்கள் ஒருவரை உங்களின் இரு விரல்களால் சுட்டிக்காட்டும்போது மீதமுள்ள மூன்று விரல்களும் உங்களை சுட்டிக்காட்டும் என்பதை மறந்து விடாதீர்கள். முதலில் உங்களை நீங்கள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சரி செய்து கொள்ளுங்கள் " என தெரிவித்துள்ளார்.  இவரது இந்த பதிவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிங்கிள் பசங்க டைட்டில் வின்னர் யார்? பைனல்ஸில் கூமாபட்டி தங்கப்பாண்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
தாராவை பகடைக்காயாக பயன்படுத்தி எஸ்கேப் ஆக பார்க்கும் கதிர்... தட்டிதூக்கினாரா கொற்றவை? எதிர்நீச்சல் தொடர்கிறது