
நடிகர் விஷ்ணு விஷால், தன்னுடைய ஸ்ட்ரெஸ் மட்டும் டென்ஷன் போன்றவற்றை குறைப்பதற்கு, கப்பிங் தெரபி மேற்கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா? ரசிகர்களை ஆச்சர்யடுத்திய பிறந்தநாள் புகைப்படம்..!
தமிழ் சினிமாவில் பிஸி நடிகராக மாறி இருக்கும், விஷ்ணு விஷால்... கடந்த மாதம் தான், தன்னுடைய நீண்ட நாள் காதலி, பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தற்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளதால், மனைவி ஜுவாலை காட்டவுடன் ஓய்வு நாட்களை அனுபவித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது விஷ்ணு விஷால், வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில், தற்போது வெளிநாடுகளில் மிகவும் பிரபலமாக செய்து கொள்ளப்படும் கப்பிங் தெரபி செய்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியத்தக்க வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: ச்சீ! என்ன கன்றாவி டிரஸ் இது... மேலாடை அணிவதில் மிதமிஞ்சிய கவர்ச்சி காட்டி ரசிகர்களை மிரளவைத்த சாக்ஷி..!
இந்த கப்பிங் தெரபி செய்து கொள்வதால்... உடலில் உள்ள வலிகள், ஸ்ட்ரெஸ், டென்ஷன் போன்றவை குறைவதாக தெரிவிக்கின்றனர். சீனாவின் பழங்கால மார்ஷியல் ஆர்ட்ஸ்களில் ஒன்றான கப்பிங் தெரபியை பல ஹாலிவுட் பிரபலங்களான தொடர்ந்து எடுத்து வருகின்றனர். குறிப்பாக இந்த சப்பிங் தெரபி, நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து மூச்சு பிடிப்புக்காக மேற்கொள்ளப்படும் சிகிச்சையை ஒற்றே அமைந்துள்ளது. இதை தான், தற்போது விஷ்ணு விஷால் மேற்கொண்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.