
பிரபல உணவு நிறுவனத்தில் வேலை செய்த நபர் ஒருவர், ஆர்டர் செய்யப்பட்ட உணவை வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்யும் முன் ஒரு ஓரமாக நின்று, உணவு பொட்டிலத்தை அவிழ்த்து சிறுது சாப்பிட்டு விட்டு பின் அதனை பேக் செய்து போல் ஒரு வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.
இந்த காட்சி அடிக்கடி இது போன்ற உணவு பொருட்களை ஆர்டர் செய்து சாப்பிடும் வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. பலர் இந்த செயலை செய்த ஊழியருக்கு எதிராக போர் கொடி உயர்த்தினர்.
ஆனால் மற்றொரு தரப்பினர் பசியின் கொடுமையால் கூட இந்த ஊழியர் இப்படி செய்திருக்கலாம் என்று கூறி, இதை பெரிது படுத்த வேண்டாம் என தெரிவித்தனர்.
மேலும் பொதுமக்களை தாண்டி ஒரு சில பிரபலங்கள் கூட இந்த சம்பவம் குறித்து தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஏற்கனவே உணவை சாப்பிட்ட அந்த ஊழியருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.
அவரை தொடர்ந்து நடிகை சஞ்சனா கல்ராணி, ட்விட்டர் பக்கத்தில் உணவு சாப்பிட்ட ஊழியருக்கு ஆதரவாக ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் 'பசியால் செய்த தவறு ஒரு பெரிய குற்றமா? ஏன் இவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கக்கூடாதா? உணவைத்தானே திருடி சாப்பிட்டார், அவர் என்ன அந்நிறுவனத்தின் சொத்தையா கொள்ளையடித்துவிட்டார். இவருக்கு இன்னொரு வாய்ப்பு அந்நிறுவனம் வழங்கவேண்டும். பசியால் செய்யும் தவறு குற்றமல்ல என்று அந்த நபருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இது போன்ற உணவகங்களையும், அதில் வேலை செய்யும் ஊழியர்களையும் நம்பி தான் பொதுமக்கள் ஆர்டர் செய்கிறார்கள். ஆனால் அவர்களுடைய நம்பிக்கை பொய்யாகும் விதமாக உணவை சிறிதளவு சாப்பிட்டுவிட்டு, மீதத்தை வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்வது மன்னிக்க முடியாத குற்றம் என்று பல நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.