கணவரை பிரியும் சமந்தா…… அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் ரசிகர்கள் பேரதிர்ச்சி....!

Published : Sep 27, 2021, 11:38 AM IST
கணவரை பிரியும் சமந்தா…… அடுத்தடுத்து வெளியாகும் தகவல்களால் ரசிகர்கள் பேரதிர்ச்சி....!

சுருக்கம்

கணவரின் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை நடிகை சமந்தா தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். குடும்பத்தினர், நண்பர்கள் மேற்கொண்ட சமரச முயற்சியும் கைகொடுக்கவில்லை.

கணவரின் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை நடிகை சமந்தா தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். குடும்பத்தினர், நண்பர்கள் மேற்கொண்ட சமரச முயற்சியும் கைகொடுக்கவில்லை.

தமிழில் முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து வெற்றிப்படங்களை கொடுத்த நடிகை சமந்தா, தெலுங்குக்கு சென்றதும் அங்குள்ள வாரிசு நடிகரான நாக சைத்தன்யா உடன் காதலில் விழுந்தார். உருகி, உருகி காதலித்த இருவரும் குடும்பத்தினர் சம்மதத்தோடு கடந்த 2017-ல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பின்னரும் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த சமந்தா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் வெற்றிக்கொடியை நாட்டினார். பேமிலி மேன் வெப் தொடரில் சமந்தாவின் நடிப்பு பாராட்டுகளை குவிக்க அவரது சம்பளமும் பல கோடிகளாக உயர்ந்தது. திருமணமான பின்னரும் கவர்ச்சியான காட்சிகளில் நடிப்பதை சமந்தா நிறுத்தவில்லை. இதனிடையே சமந்தாவிற்கு அவரது கணவர் நாக சைத்தன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக தகவல் வெளியாகியது.

விவகாரத்து செய்தியை இருவரும் மறுக்காத நிலையில், நாக சைத்தன்யாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கூட நடிகை சமந்தா கலந்துகொள்ளாதது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கணவன், மனைவியை சமாதானம் செய்யும் முயற்சியை அவரது குடும்ப நண்பர்கள் மேற்கொண்டனர். ஆனால் அது கைகூடவில்லை என்று தெரிகிறது.

இந்தநிலையில் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சட்டா படம் மூலம் நாக சைத்தன்யா இந்தியில் அறிமுகமாகிறார். இதற்காக நடிகர் அமீர்கானை வீட்டிற்கு வரவழைத்து நாகர்ஜூனா குடும்பத்தினர் விருந்து கொடுத்தனர். மிக முக்கியமான இந்த விருந்தையும் சமந்தா புறக்கணித்துள்ளார். இதனால் சமந்தா விரைவில் கணவரை விவாகரத்து செய்வது உறுதி என்று தெலுங்கு சினிமா பிரபலங்கள் முனுமுனுக்கின்றனர். காதல் கணவனை சமந்தா பிரிவது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜனனியின் புது பிசினஸுக்கு வந்த சிக்கல்... குடைச்சல் கொடுக்க ரெடியான ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு