’கவினும் லாஸ்லியாவும் என் கண்முன்னால் தப்புத்தப்பாக நடந்துகொண்டார்கள்’...பிக்பாஸ்ல என்னதாங்க நடக்குது?...

Published : Aug 17, 2019, 01:07 PM IST
’கவினும் லாஸ்லியாவும் என் கண்முன்னால் தப்புத்தப்பாக நடந்துகொண்டார்கள்’...பிக்பாஸ்ல என்னதாங்க நடக்குது?...

சுருக்கம்

’தன்னை ஒன்றும் தெரியாத அப்பாவி போல காட்டிக்கொள்ளும் லாஸ்லியா ரொம்ப பயங்கரமான ஆளு. அவருக்கு எத்தனையோ முகங்கள் இருக்கு. அதை கண்டு மற்ற போட்டியாளர்கள் அலறப்போகிறார்கள்’ என்று குண்டு மேல் குண்டு போடுகிறார் கடந்த வாரம் எலிமினேஷனில் வெளிவந்த நடிகை சாக்‌ஷி அகர்வால்.  

’தன்னை ஒன்றும் தெரியாத அப்பாவி போல காட்டிக்கொள்ளும் லாஸ்லியா ரொம்ப பயங்கரமான ஆளு. அவருக்கு எத்தனையோ முகங்கள் இருக்கு. அதை கண்டு மற்ற போட்டியாளர்கள் அலறப்போகிறார்கள்’ என்று குண்டு மேல் குண்டு போடுகிறார் கடந்த வாரம் எலிமினேஷனில் வெளிவந்த நடிகை சாக்‌ஷி அகர்வால்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி குறித்து சாக்ஷி அகர்வால் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஒருவர் வெளியேறினால் அவர்களை அழைத்து பேட்டி எடுப்பது ட்ரெண்டாகியுள்ளது. அப்போது அவர்களிடம் வீட்டில் நடக்கும் அனைத்து ரகசியத்தைப் பற்றியும்  கேட்டுத் தெரிந்து கொள்கின்றனர். அந்த வகையில் கடைசியாக வெளியேறிய சாக்ஷி சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் கவின், லாஸ்லியாவின் முக்கோண காதல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. 

அதற்கு பதிலளித்த சாக்ஷி,’நான் லாஸ்லியாவிடம் கவின் பற்றி கேட்ட போது நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று கூறினார். அதே போல கவினிடம் கேட்ட போதும் நான் லாஸ்லியவை தோழியாக பார்க்கிறேன். நீ தான் மச்சான் எனக்கு முக்கியம் என்று கூறினார். ஆனால், அதன் பிறகு என் முன்னாடியே அவங்க இரண்டு பேரும் தப்புத்தப்பாக நிறைய விஷயம் செய்தார்கள். இதனால் கோபமடைந்த நான் கவினிடம் சண்டையிட்டேன். வனிதா சொன்னதை போல் லாஸ்லியாவின்  உண்மை முகம் என்ன என்பதை என்னால்  கடைசி வரை கணிக்க முடியவில்லை. உன்மையில் அவருக்கு 10 முகம் இருக்கிறது. எந்த முகம் உண்மையான முகம் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று கூறியுள்ளார்.

மற்றவர்களுக்கு பல்வேறு முகங்களைக் காட்டிக்கொண்டிருந்த லாஸ்லியா சேரனுக்கு மட்டும் மகள் என்ற ஒரே முகத்தைத்தான் காட்டி வந்தார். அதற்கும் இப்போது ஆபத்து ஏற்பட்டு இருவரும் பேசிக்கொள்ளாமல் இருக்கிறார்கள். லியாவின் மீது கடுப்பு இருந்தாலும் அவர் விலகியிருப்பது மனவலியை ஏற்படுத்துகிறது என்று பிறகு ஷெரீனிடம் புலம்பிக் கொண்டிருக்கிறார் சேரன்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிங்கத்த பார்த்து ஷாக் ரியாக்‌ஷன் கொடுத்த சந்திரகலா அண்ட் சாமுண்டீஸ்வரி: கார்த்திகை தீபம் டுவிஸ்ட்!
கம்பீரமாக எண்ட்ரி கொடுத்த பாஸ் கார்த்திக்- சூடுபிடிக்க தொடங்கிய கார்த்திகை தீபம்; கொண்டாடும் ஃபேன்ஸ்!