இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார்?

Published : Aug 17, 2019, 01:02 PM IST
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார்?

சுருக்கம்

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும், ஒரு நபர் மக்கள் போடும் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறி கொண்டு இருக்கிறார் என்பது நாம் அறிந்தது தான்.   

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும், ஒரு நபர் மக்கள் போடும் வாக்குகளின் அடிப்படையில் வெளியேறி கொண்டு இருக்கிறார் என்பது நாம் அறிந்தது தான். 

அந்த வகையில் இதுவரை, பார்த்திமா பாபு, மோகன் வைத்யா,  மீராமிதுன், வனிதா, ரேஷ்மா, உள்ளிட்டோர் வெளியேறியுள்ளனர்.  கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு சாக்ஷி வெளியேறினார். அதே போல் மக்களின் ஆதரவு இருந்தும் ஒரு சில காரணங்களுக்காக, நடிகர் சரவணன் வெளியேற்றப்பட்டார்.  

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ள நபர் நபர் யார் என்கிற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. கடந்த வாரங்களில், மிகவும் நியாயமாக தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியதால், இந்த வாரம் முகேன் மக்களிடம் அதிக வாக்குகள் பெற்று சேஃப் ஆகவே அதிக வாய்ப்புகள் உள்ளது.

அதே போல், லாஸ்லியாவை காப்பாற்றுவதை மட்டுமே கொள்கையாக வைத்திருக்கும் அவருடைய ஆர்மி, கண்டிப்பாக இந்த வாரம் லாஸ்லியாவை வெளியேற விடாமல் காப்பாற்றி விடுவார்கள். கவினும் சில வாரங்களாக தன்னுடைய தவறுகளை உணர்ந்து விளையாடி வருவதால் அவரும் காப்பாற்ற பட வாய்ப்பு உள்ளது.

மீதம் உள்ளவர்கள் என்றால் அது மதுமிதா மற்றும் அபிராமி தான்.  இவர்கள் இருவரின்,  ஆண்கள் பெண்களை யூஸ் செய்து கொள்கிறார்கள் என, தன்னுடைய மனதில் பட்ட கருத்தை தைரியமாக கூறி, ஆதரவையும், விமர்சனங்களையும் பெற்றுள்ள மதுமிதா சேப் ஆகவும் வாய்ப்புள்ளது, வெளியேறவும் வாய்ப்பு உள்ளதாகவே கருதப்படுகிறது. அவரை தொடர்ந்து அபிராமி எப்போதும் சண்டை வாங்கி அழுது கொண்டு மட்டுமே உள்ளதால் இவரும் வெளியேற வாய்ப்புள்ளதாக மக்கள் கருதுகிறார்கள்.

எனினும், இதில் ஏதாவது புதிய ட்விஸ்டை கூட பிக்பாஸ் வைக்கலாம். என்ன நடக்கிறது... யார் வெளியேறுவார் என்பது இன்றைய தினம் தெரிய வரலாம். அதே போல் சிறப்பு விருந்தினராக வந்துள்ள வனிதா... இந்த வாரமும் பிக்பாஸ் வீட்டின் உள்ளேயே இருப்பாரா... வெளியேறுவாரா என்பதும் இன்று தெரியவரும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிங்கத்த பார்த்து ஷாக் ரியாக்‌ஷன் கொடுத்த சந்திரகலா அண்ட் சாமுண்டீஸ்வரி: கார்த்திகை தீபம் டுவிஸ்ட்!
கம்பீரமாக எண்ட்ரி கொடுத்த பாஸ் கார்த்திக்- சூடுபிடிக்க தொடங்கிய கார்த்திகை தீபம்; கொண்டாடும் ஃபேன்ஸ்!