
பிரபல மாடல் அழகியும், நடிகையுமான, ரூகி சிங் குடிபோதையில், போலீஸ்காரர்களை தாக்கியதாகவும் , விபத்தை ஏற்படுத்தியதாகவும், கடந்த ஓரிரு தினங்களுக்கு முன் செய்திகள் வெளியாகி வைரலாக பரவியது. இது குறித்து தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு உண்மை என்ன என்பது கூறியுள்ளார் ரூகி.
மும்பை நடிகைகள் அடிக்கடி பிரச்சினைகளில் சிக்கும் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் மார்ச் 31 ஆம் தேதி தன்னுடைய நண்பர்களுடன் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றிற்கு சென்ற நடிகை, குடி போதையில் ஓட்டல் ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளார்.
இதனால் ஹோட்டல் நிர்வாகம், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதை அறிந்து அங்கு வந்த போலீசார்... இருதரப்பினரிடமும் சமாதானம் செய்ய முயற்சி செய்துள்ளனர்.
அப்போது குடிபோதை தலைக்கேறிய நிலையில் இருந்த நடிகை போலீஸ்காரர்களை இழுத்து அடித்துள்ளார். பின்னர் தன்னுடைய ஆண் நண்பர் வைத்திருந்த காரை எடுத்துச் சென்று சில வாகனங்கள் மேல் விபத்தை ஏற்படுத்தினார்.
நள்ளிரவில் இந்த சம்பவம் நடைபெற்றதால் போலீசார் அவரை கைது செய்யாமல், 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்ததாக கூறப்பட்டது.
இந்த விபத்தை நடிகை ரூகி சிங் தான் ஏற்படுத்தியதாக, அவருடைய புகைப்படத்துடன் பல மீடியாக்கள் செய்தி வெளியிட்டது. ஆனால் உண்மையில் அந்த விபத்தை ஏற்படுத்தியது இவர் இல்லையாம். இவருடைய சாயலில் இருந்த மற்றொரு பெண்.
உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளாமல் பிரபல மீடியாக்கள் கூட தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு, என் வாழ்க்கையில் விளையாடி விட்டது என அழுதவாறு நடிகை ரூகி சிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.