
கண்டேன், மாப்பிள்ளை விநாயகர், போன்ற தமிழ் படங்களிலும் பல்வேறு தெலுங்கு படங்களிலும் நடித்திருப்பவர் நடிகை ரேஷ்மி கவுதம்.
தற்போது தமிழ், தெலுங்கில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்.
இவரை கார் டிரைவர் ஒருவர் ஒருமுறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்ததாக ஓபன் டாக் கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து சம்பவம் பற்றி நடிகை ரேஷ்மி கெளதம் கூறும் போது.....
தனக்கு நேர்ந்த இந்த கொடுமையான சம்பவத்தை இது வரை யாரிடமும் கூறாமல் இருந்தேன் என்றும்,கூறினார்.
மேலும் சில நாட்களுக்கு முன்பு ஒருமுறை ஆந்திராவில் இருந்து குர்னூருக்கு சென்றதாகவும் அப்போது சில நிமிடங்கள் தான் தூங்கி எழுந்து பார்த்த போது....
கார் வழக்கமான பாதையிலிருந்து மாறி காட்டுப் பகுதியை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. உடனே ஏன் இந்த பக்கம் செல்கிறீர்கள் என்று டிரைவர்யிடம் கேட்டபோது இது குறுக்கு வழி என சமாளித்தார்.
பின் திடீரென காரை நிறுத்தி என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அவரிடம் இருந்து தப்பிக்க சண்டை போட்டேன்.
பிறகு அந்த காரிலிருந்து இறங்கி சினிமாவில் வரும் கட்சிகளைப்போல் தப்பினேன் என்று கூறி கதறியுள்ளார் . இவரது இந்த பேட்டி தற்போது சினிமா திரையுலகத்தினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.