தொழிலாளர் இறக்க நேர்ந்தும் - மனம் இறங்காத ரஜினி குடும்பம்.....!!!

Asianet News Tamil  
Published : Dec 28, 2016, 04:24 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
தொழிலாளர் இறக்க நேர்ந்தும் - மனம் இறங்காத ரஜினி குடும்பம்.....!!!

சுருக்கம்

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் இடம் பிடித்தவர், நடிகர் ரஜினிகாந்த், இவருக்கு பண கஷ்டம் உள்ளது என்றால் யாராலும் நம்ப முடியாது.

காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  பலருக்கு உதவிகளை கேட்காமல் செய்பவர், அதே போல் தான் செய்த உதவிகளை அவர் இது வரை வெளியே சொன்னதும்  இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடிகர் ரஜினிகாந்த்  மனைவி லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் ஆசிரமம்  பள்ளியில், கடந்த 6 மாதமாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததால் அங்கு பணியில் உள்ள அனைவரும் கடந்த வாரம் போராட்டம் நடத்தினர்.

சென்னையில் முக்கிய பகுதியான, கிண்டியில் அமைந்துள்ள ஆசிரமம் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில், 1,200கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கின்றனர்.

இங்கு 75, ஆசிரியர்கள், 26 வேன் ஓட்டுனர்கள் மற்றும் வேலைப்பணியாட்கள் வேலை செய்து வருகின்றனர்.

தற்போது இங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஆறு மாதங்களாக சம்பளம் வழங்காமல் உள்ளதாக கூறப்படும் நிலையில் கடந்த வாரம் ஓட்டுனர்கள் தீடீர் என பள்ளி வாகனங்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே போல் ஆசிரியர்கள் சம்பளம் தராததால்  பள்ளி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஒரு டிரைவர் பணம் இல்லாத காரணத்தினால் தனது கடன் மற்றும் மற்ற செலவுகளை சமாளிக்க முடியாமால் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த செய்தியை ரஜினிகாந்த் காதுகளுக்கு கொண்டு செல்ல மறுக்கிறார்கள்  அவரது குடும்பத்தினர் என கூறி. இன்று வேலை நிறுத்தம் செய்ததாக வாகன ஓட்டுனர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

ஏற்கனவே இந்த விஷயம் வெளியில் வந்தபோது வதந்தி என கூறி இதற்கு வருத்தப்படுவதாக கூறி இருந்தார் லதா ரஜினிகாந்த் ஆனால் மீண்டும் தொழிலாளர்கள் போர் கொடி உயர்த்தியுள்ளது, எது உண்மை என காட்டுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

எனக்காக எல்லாத்தையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன் - விஜய் பேச்சு
மீச வச்ச குழந்தையாக மாறிய விஜய்... அப்பாவை பார்த்ததும் பாசத்தில் ஓடோடி வந்து கட்டிப்பிடித்த தளபதி - வீடியோ இதோ