’என்னை அடிக்கடி சாகடித்து விளையாடுகிறார்கள்’...கடலோரக் கவிதைகள் ரேகா கண்ணீர்...

Published : Sep 27, 2019, 09:59 AM IST
’என்னை அடிக்கடி சாகடித்து விளையாடுகிறார்கள்’...கடலோரக் கவிதைகள் ரேகா கண்ணீர்...

சுருக்கம்

1986 ஆம் ஆண்டு வெளியான ‘கடலோர கவிதைகள்’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ரேகா, தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்தார். தற்போது அக்கா, அம்மா உள்ளிட்ட குணச்சித்திர வேடங்களில் அவ்வப்போது நடித்து வருபவர், ஜி.வி.பிரகாஷ், ஷாலினி ஆகியோர் நடித்திருக்கும் ’100% காதல்’ படத்திலும் அம்மா வேடத்தில் நடித்திருக்கிறார்.  

’யுடுயூபில் அதிக பார்வையாளர்கள் மூலம் அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் என்னை அடிக்கடி சாகடித்துக்கொண்டிருக்கிறார்கள். அதைவிடக் கொடுமை அப்படிப்பட்ட செய்திகளை புதுப்பட வாய்ப்புகளுக்காக நானே பரப்புவதாக அச்செய்திகளுக்குக் கீழே கமெண்ட் வருவது’என்று நொந்துகொள்கிறார் பிரபல நடிகை ரேகா.

1986 ஆம் ஆண்டு வெளியான ‘கடலோர கவிதைகள்’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ரேகா, தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக திகழ்ந்தார். தற்போது அக்கா, அம்மா உள்ளிட்ட குணச்சித்திர வேடங்களில் அவ்வப்போது நடித்து வருபவர், ஜி.வி.பிரகாஷ், ஷாலினி ஆகியோர் நடித்திருக்கும் ’100% காதல்’ படத்திலும் அம்மா வேடத்தில் நடித்திருக்கிறார்.

இப்படம் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி வரும் வெள்ளியன்று ரிலீஸாக உள்ள நிலையில், நேற்று படக்குழுவினர் நேற்று சென்னை பிரசாத் லேபில்  பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகை ரேகா, தன்னைப் பற்றி யுடியூபில் தவறான செய்தி வெளியாவதற்கு கண்டனம் தெரிவித்தார்.

”நான் இறந்துவிட்டதாக பல முறை செய்தி வெளியிடுகிறார்கள். அதை லட்சக்கணக்கான மக்கள் பார்ப்பதால் அவர்களுக்கு நிறைய பணம் கிடைக்கிறது. இதற்காக, என்னை பல முறை சாகடிப்பதா?, சரி அவர்கள் தான் அப்படி செய்கிறார்கள் என்றால், அதை பார்க்கும் மக்களுக்கு பொது அறிவு என்பதே இல்லதது போல கமெண்ட் செய்கிறார்கள். விளம்பரத்திற்காக, புதுப்பட வாய்ப்புகளுக்காக  நானே அதுபோன்ற செய்திகளை வெளியிடுவதாக மக்கள் கருதுகிறார்கள். விளம்பரத்திற்காக ஒருவர் தான் இறந்துவிட்டதாக கூறுவாரா? இதை மக்கள் ஏன் யோசிக்கத் தவறுகிறார்கள் என்று தெரியைல்லை.
 நான் இப்போதும் நல்ல ஆரோக்கியத்துடன் ஜம்முனு தான் இருக்கிறேன். இன்னும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்று நினைத்து கதைகள் கேட்டு வருகிறேன். என் வாழ்க்கையில் எப்போதும் வெற்றி தான், இனியும் அப்படி தான்.” என்றார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!
15 வருடங்களாக நாகார்ஜுனாவை வாட்டும் நோய்! ஏன் இன்னும் குணமாகவில்லை? கவலையில் ரசிகர்கள்!