
நடிகை ரேகா:
1986 ஆம் ஆண்டு 'கடலோர கவிதைகள்' படம் மூலம் 'ஜெனிபர்' டீச்சராக அறிமுகமான ரேகா, இந்த படத்தை தொடர்ந்து புன்னகை மன்னன், அண்ணாமலை உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமானவர்.
திருமணத்திற்கு பின் நடிப்புக்கு சிறு இடைவெளி விட்டிருந்த இவர், மீண்டும் நடிகர் ஸ்ரீகாந்த் அறிமுகமான 'ரோஜா கூட்டம்' படம் மூலம் ரவுடி போலீஸ் கெட்டப்பில் ரீஎன்ட்ரி கொடுத்தார். பின் தற்போது பல படங்களில் ஹீரோக்களுக்கு அம்மாவாகவும், குணசித்திர வேடங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
நடிகையாகும் மகள்:
இந்நிலையில் நடிகை ரேகாவின் மகள் அனுஷா, நடிக்க வர இருப்பதாக அண்மைக்காலமாகவே பல தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கிறது.
மகள் பற்றி பேசிய ரேகா:
தற்போது இது குறித்து பேசியுள்ள நடிகை ரேகா... 'என் மகள் சினிமாவில் நடிக்கவிருப்பதாக சமூக வலைதளங்களிலும், சில இணையதள பக்கங்களிலும் தவறான செய்தகள் பரப்பபடுவதாக கேள்விப்பட்டேன். அந்த செய்தியில் துளியும் உண்மை இல்லை என்று கூறியுள்ளார்.
உயர்கல்விக்கு ஆயத்தமாகும் அனுஷா:
மேலும் தற்போது என் மகள் உயர் கல்வி படிப்பதற்காக ஆயதம்மாகி வருகிறார். அவளுக்கு சினிமாவில் நடிப்பதற்கான ஆர்வமோ... ஆசையோ சுத்தமாக இல்லை இதனால் இதுபோன்ற தவறான தகவல்களை இனி பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.