பள்ளி காலம் தான் அப்படி என்றால்... 18 வயசுக்கு மேல் இப்படி! முதல் முறையாக தன்னை பற்றி கூறி உருகிய ராஷ்மிகா!

Published : May 29, 2020, 06:14 PM IST
பள்ளி காலம் தான் அப்படி என்றால்... 18 வயசுக்கு மேல் இப்படி!  முதல் முறையாக தன்னை பற்றி கூறி உருகிய ராஷ்மிகா!

சுருக்கம்

தெலுங்கு திரையுலகில், முன்னணி நடிகையாக இருக்கும் அழகு தேவதை ராஷ்மிகா. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், முதல் முறையாக மிக நீண்ட பதிவு ஒன்றை போட்டு, தன்னுடைய வாழ்க்கை பற்றி தெரிவித்துள்ளார்.  

தெலுங்கு திரையுலகில், முன்னணி நடிகையாக இருக்கும் அழகு தேவதை ராஷ்மிகா. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், முதல் முறையாக மிக நீண்ட பதிவு ஒன்றை போட்டு, தன்னுடைய வாழ்க்கை பற்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக 'கீதா கோவிந்தம்' படத்தில் நடித்து, தெலுங்கு ரசிகர்களை மட்டும் இன்றி, தமிழ் திரையுலகை சேர்ந்த ரசிகர்கள் மனதையும் கொள்ளை கொண்டவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. 

தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என 3 மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். எப்படியும் இந்த வருடம், ரஷ்மிக்கா நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ள 'சுல்தான்' திரைப்படம் வெளியாகும் என தெரிகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக அணைத்து திரையுலக பணிகளும் முடங்கி உள்ளதால், நடிகை ராஷ்மிக்காவும் கடந்த 2 மாதமாக எந்த திரைப்பட படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளாமல், வீட்டிலேயே முடங்கியுள்ளார். இது குறித்து தான் தற்போது நீண்ட ஒரு பதிவை போட்டுள்ளார் ராஷ்மிகா.

இதில் அவர் பதிவிட்டுள்ளதாவது...  "18 வயதில் இருந்தே எனது வாழ்க்கை மாரத்தான் போட்டி போல் தான் இருந்திருக்கிறது. ஒரு ஓட்டத்தை முடித்தவுடனேயே அடுத்ததடுத்த ஓட்டம் ஆரம்பிக்கும். நான் குறை சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். ஆனால் அதை தான் நானும் விரும்பினேன். உண்மையை சொன்னால் இதுவரை இவ்வளவு நாள் வீட்டில் இருந்ததே இல்லை. ஸ்கூல் படிக்கும் போது ஹாஸ்டலில் தான் இருந்தேன். 

இதனால் பெற்றோருடன் தங்க முடியவில்லை என போராடி இருக்கிறேன். ஆனால் இப்போது நிலைமை வேறு என் தாய் எனக்காக ஷூட்டிங் ஸ்பாட்டில் நீண்ட நேரம் காத்திருப்பதும், எனது தந்தை என்னிடம் நேரம் செலவழிப்பதும் அதிகமாகி உள்ளது. 

 

குறிப்பாக இந்த இரண்டு மாதம் வீட்டில் பெற்றோருடன் நேரம் செலவழித்துள்ளது, மனதுக்கு மிகவும் நிறைவாக உள்ளது என உருக்கமாக தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவு ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Rajinikanth: நான் மதுப்பழக்கத்தை நிறுத்த 'அவர்' தான் காரணம்! ரஜினிகாந்த் சொன்ன ஷூட்டிங் ஸ்பாட் சம்பவம்!
OTT Crime Thriller : ஓடிடியில் செம ஒர்த்தான தமிழ் படம்... இந்த வீக்கெண்ட் மிஸ் பண்ணாம பாருங்க!