இப்படியெல்லாம் செய்யாதீங்க... ரசிகர்களை எச்சரித்த ராஷ்மிகா மந்தனா...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 28, 2021, 05:59 PM IST
இப்படியெல்லாம் செய்யாதீங்க... ரசிகர்களை எச்சரித்த ராஷ்மிகா மந்தனா...!

சுருக்கம்

இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் வைரலானது. இது தொடர்பாக ராஷ்மிகா மந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. தமிழிலும் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் என்ற படத்தில் நடித்து கோலிவுட் ரசிகர்களின் மனதை கவர்ந்துவிட்டார். பிரபல நடிகை என்றாலே தீவிர ரசிகர்கள் இருப்பது சகஜம் தானே. ஆனால் அப்படிப்பட்ட தீவிர ரசிகர் ஒருவர் பார்த்த காரியம் தான் ராஷ்மிகா மந்தனா தன்னுடைய ரசிகர்களை எச்சரிக்க வைத்துள்ளது. தெலங்கானாவில் இருக்கும் ரசிகர் ஒருவர், ராஷ்மிகா மந்தனாவைக் காண கர்நாடகாவுக்கு நடந்தே சென்றுள்ளார்.  ராஷ்மிகா மந்தனாவின் வீட்டு முகவரியை விசாரித்துள்ளார். 

இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா இருக்கும் வீட்டின் பகுதி ஊரடங்கில் இருப்பதாகவும், அதுமட்டுமன்றி அவரோ மும்பையில் படப்பிடிப்பில் இருப்பதாகவும் கூறி அனுப்பிவைத்துள்ளனர். இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் வைரலானது. இது தொடர்பாக ராஷ்மிகா மந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில், "நண்பர்களே உங்களில் ஒருவர் மிக நீண்ட தூரம் பயணம் செய்து என்னைப் பார்க்க என் வீட்டுக்குச் சென்ற தகவல் என் கவனத்துக்கு வந்தது. தயவுசெய்து இதுபோன்ற விஷயங்களைச் செய்யாதீர்கள். உங்களைச் சந்திக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். நிச்சயம் ஒருநாள் உங்களைச் சந்திப்பேன் என்று நம்புகிறேன். ஆனால், இப்போதைக்கு என் மீது இங்கிருந்தே அன்பு காட்டுங்கள். நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்" என தெரிவித்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கம்பீரமாக எண்ட்ரி கொடுத்த பாஸ் கார்த்திக்- சூடுபிடிக்க தொடங்கிய கார்த்திகை தீபம்; கொண்டாடும் ஃபேன்ஸ்!
ஜன நாயகன் லேட்டஸ்ட் அப்டேட்: மீண்டும் ஒரு மெர்சல் மேஜிக்? இரண்டு கெட்டப்பில் மிரட்டப்போகும் விஜய்?