அசோக் செல்வனுக்கு அடித்த ஜாக்பாட்... ஒரே படத்தில் இத்தனை ஹீரோயின்களா?

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 28, 2021, 03:23 PM IST
அசோக் செல்வனுக்கு அடித்த ஜாக்பாட்... ஒரே படத்தில்  இத்தனை ஹீரோயின்களா?

சுருக்கம்

தொடர்ந்து 2 ஹிட் படங்களில் 2 ஹீரோயின்களுடன் களமிறங்கிய அசோக் செல்வன், தற்போது 3 ஹீரோயின்களைக் கொண்ட கதைகளில் நடிக்க உள்ளார். 

அஜித் நடித்த 'பில்லா 2 ' படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகர் அசோக்செல்வன்.  இந்த படத்தை தொடர்ந்து சூதுகவ்வும், பீட்சா 2 ,  தெகிடி, ஆரஞ்சுமிட்டாய் என தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ஓ மை கடவுளே, தீனி ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுவும் இரண்டு ஹீரோயின்கள் கொண்ட கதையில் இவருடைய நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

குறிப்பாக தீனி படத்திற்காக தன்னுடைய உடல் எடையை 100 கிலோ வரை கூட்டி மிகவும் மெனக்கெட்டு நடித்திருந்தார். இதையடுத்து ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் மற்றும் பிளாக் டிக்கெட் கம்பெனி ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்றும், அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டோ, ரியா சுமன் 3 நாயகிகள் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 


தொடர்ந்து 2 ஹிட் படங்களில் 2 ஹீரோயின்களுடன் களமிறங்கிய அசோக் செல்வன், தற்போது 3 ஹீரோயின்களைக் கொண்ட கதைகளில் நடிக்க உள்ளார். அசோக் செல்வன் 3 நாயகிகளுடன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது.  வயகாம் 18 ஸ்டுடியோஸ் - ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் அசோக் செல்வனுடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகாவும் நடிக்க உள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திக் இயக்குகிறார். முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜி சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைக்கிறார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பவன் கல்யாணுக்காக ராம் சரண் தியாகமா? ரிலீஸ் தேதியை மாற்றிய 'கேம் சேஞ்சர்' நாயகன்; ரசிகர்கள் கவலை!
பிக் பாஸ் வீட்டில் நாய் குறைக்க காரணம் என்ன? கண்ட்ரோல் பண்ண முடியாத பாரு, கம்ருதீன் செய்யும் சில்மிஷம்!