வேஷ்டியை மடித்து கட்டி... முதல் முறையாக ஆல்பம் பாடலுக்கு ஆட்டம் போட்ட ராஷ்மிகா..!

Published : Feb 10, 2021, 09:43 AM ISTUpdated : Feb 10, 2021, 05:53 PM IST
வேஷ்டியை மடித்து கட்டி... முதல் முறையாக ஆல்பம் பாடலுக்கு ஆட்டம் போட்ட ராஷ்மிகா..!

சுருக்கம்

இந்நிலையில் இவர், முதல் முறையாக மிகவும் கலர் ஃபுல் ஆல்பம் பாடலுக்கு, வேட்டியை மடித்து கட்டி... மணப்பெண் போல் அலங்காரம் செய்து கொண்டு நடனம் ஆடி அசத்தியுள்ளார்.  

கடந்த 2016ஆம் ஆண்டு, வெளியான 'கிரீக் பார்ட்டி' என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா.  இதைத்தொடர்ந்து, அஞ்சனி புத்ரா, சமாக் போன்ற படங்களில் நடித்தார்.

பின்னர் தெலுங்கு பட வாய்ப்புகள் வர, நடிகர் நாக சௌரியாவிற்கு ஜோடியாக 'சலோ' படத்தின் நடித்தார். இந்த படம்  பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும்,  இந்த படத்தை அடுத்து நடிகர் விஜய் தேவர்கொண்டா ஜோடியாக ராஷ்மிகா நடித்த 'கீதா கோவிந்தம்' மிகப்பெரிய வெற்றி பெற்றது.மேலும் இவருக்கு, சிறந்த நடிகைக்கான விருதுகளையும் பெற்று தந்தது. 

தற்போது தெலுங்கு, கன்னடம், மொழி படங்களை தொடர்ந்து ரஷ்மிக்கா தற்போது நடிகர் கார்த்திக்கு ஜோடியாக 'சுல்தான்' படத்திலும் நடித்து வருகிறார். அதே போல் தளபதி 65 ஆவது படத்திலும் இவர் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திரையுலகில் அறிமுகமான நான்கு வருடங்களிலேயே மற்ற நடிகைகளை பொறாமைப்பட வைக்கும் அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்ட ராஷ்மிக்கா, தற்போது பாலிவுட் திரையுலகிற்கு செல்லவும் தயாராகி விட்டார்.

ஹிந்தியில் 'மிஷன் மஞ்சு' என்ற படத்தில் ராஷ்மிகா தற்போது ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் கால்பதிக்கிறார் ராஷ்மிகா. இந்நிலையில் இவர், முதல் முறையாக மிகவும் கலர் ஃபுல் ஆல்பம் பாடலுக்கு, வேட்டியை மடித்து கட்டி... மணப்பெண் போல் அலங்காரம் செய்து கொண்டு நடனம் ஆடி அசத்தியுள்ளார்.

'டாப் டக்கர்' என்று பெயரிடப்பட்டுள்ளது இந்த ஆல்பம், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ளது. பாட்ஷா என்பவர் எழுதியுள்ள இந்த பாடலை யுவன், உச்சனா அமித் ஜோனிதா காந்தி ஆகியோர் சேர்ந்து பாடியுள்ளனர். இந்த பாடலின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இருந்து குறித்து ராஷ்மிகா தன்னுடைய அனுபவம் குறித்து கூறுகையில்... இந்த ஆல்பம் பாடலில் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்ததாகவும், கண்டிப்பாக அனைத்து தரப்பை சேர்ந்தவர்களுக்கும் பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!
15 வருடங்களாக நாகார்ஜுனாவை வாட்டும் நோய்! ஏன் இன்னும் குணமாகவில்லை? கவலையில் ரசிகர்கள்!