பொது இடத்தில் இப்படி ஆபாசமா டிரஸ் போடலாமா ? நடிகை மீது வழக்கு !!

By Selvanayagam PFirst Published Dec 3, 2018, 8:15 AM IST
Highlights

கெய்ரோ திரைப்பட விழாவில் ஆபாசமாக உடை அணிந்து வந்த நடிகை மீது பழமைவாத வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

 

எகிப்தைப் பொறுத்தவரை என்னதான் சர்வதேச திரைப்பட விழாக்கள் என மார்டன் ஸ்டைல்கள் அரங்கேறி வந்தாலும், அந்த  நாட்டு மக்களும், அரசும் இன்னும் பழமையா கொள்கைகளையே கடைப்பிடித்து வருகின்றன.

எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் கெய்ரோ சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இந்த விழாவில் அந்த நாட்டின் நடிகை ரானியா யூசெப், தொடை தெரிகிற அளவுக்கு ஆபாசமாக மெல்லிய உடை அணிந்து வந்து கலந்துகொண்டார். இது அங்கு பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அவர் மீது அம்ரோ அப்தெல் சலாம், சமிர் சப்ரி என்னும் 2 வக்கீல்கள் கெய்ரோ கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளனர். அந்த வழக்கில் நடிகை ரானியா யூசெப் ஆபாச உடை அணிந்து வந்தது பாலுணர்வை தூண்டுவதாக அமைந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து, தான் அவ்வாறு உடை உடுத்திக்கொண்டு வந்து, திரைப்பட விழாவில் தோன்றியதற்காக நடிகை ரானியா யூசெப் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.



இப்படி நான் உடை உடுத்தியது இதுவே முதல் முறை, இது பெருத்த கோபத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என நான் உணரவில்லை என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எகிப்து சமூகத்தின் மதிப்பினைக் காக்க நான் மீண்டும் உறுதி எடுத்துக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக எகிப்து நாட்டில்  பெரும்பாலும் பழமைவாதிகளே அதிகமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!