
நடிகர் சிம்பு நடித்த குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை 'ரம்யா', இந்த படத்தை தொடர்ந்து சூர்யா, தனுஷ், அர்ஜுன் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்த பிரபலமானார்.
இவர் தமிழில் மற்றும் இன்றி கன்னட சினிமாவிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும்போதே இவரை அரசியலில் இறங்கி, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, பார்லிமென்ட் உறுப்பினராகவும் ஆனார்.
நடிகை ரம்யாவை அரசியலுக்கு வந்ததில் மறைந்த நடிகர் அம்பரீஷூக்கு பெரும் பங்கு உண்டு. ஆனால் ரம்யா அம்பரீஷின் இறுதி சடங்கில் கூட p பங்கேற்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அம்பரீஷ் ரசிகர்கள், மாண்டியா மாவட்டம் முழுவதும் ரம்யாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் தன்னுடைய அரசியல் குருவான அமரீஷின் இறுதி சடங்கில் ஏன் கலந்து கொள்ள முடியவில்லை என்கிற தகவலை கண்ணீருடன் இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளார் ரம்யா.
இது குறித்து அவர் கூறியுள்ளது தனக்கு விநோதமான எலும்பு நோய் வந்திருப்பதாகவும், அதனால் நடக்ககூட சிரமம்படுவதாகவும், இதனை கவனிக்காமல் விட்டிருந்தால் புற்று நோயாக மாறியிருக்கும் என்றும் விளக்கம் அளித்துள்ளார். அதோடு அம்பரீஷ் மறைவுக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த அக்டோபர் மாதம் முதல், நான் ஆஸ்டியோபிளாஸ்டோமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். இதற்காக சிகிச்சை பெற்று வருகின்றேன். பாத எலும்புகளில் வலி கடுமையாக உள்ளது. அடுத்த சில வாரங்களில் வலி கொஞ்சம் கொஞ்சமாக குறையும். இதை அலட்சியப்படுத்தினால் எலும்பு சார்ந்த புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறினார்கள். எனவே உடனடியாக சிகிச்சை எடுத்து வருகின்றேன்.
அம்ரீஷ் மறைவு செய்தி மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல். அவரை எனக்கு எப்போதும் பிடிக்கும். எப்போதும் என் மனதில் நீங்கா நினைவுகளாக இருப்பார். என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.