‘நடிகர் விக்ரம் பட இயக்குநர் என்னிடம் அருவருப்பாக நடந்துகொண்டார்’... ராதிகா ஆப்தே

Published : Nov 11, 2018, 11:44 AM ISTUpdated : Nov 11, 2018, 12:19 PM IST
‘நடிகர் விக்ரம் பட இயக்குநர் என்னிடம் அருவருப்பாக நடந்துகொண்டார்’... ராதிகா ஆப்தே

சுருக்கம்

‘நடிகர் விக்ரமை கதாநாயகனாக வைத்து ஒரு பிரம்மாண்டமான சரித்திரப்படம் எடுக்கப்போவதாக என்னை வைத்து ஆடிஷன் நடத்திய ஒரு தமிழ் இயக்குநர் மிகவும் அருவருப்பாக நடந்துகொண்டார்’ என்கிறார் ‘கபாலி’ நாயகி ராதிகா ஆப்தே.

‘நடிகர் விக்ரமை கதாநாயகனாக வைத்து ஒரு பிரம்மாண்டமான சரித்திரப்படம் எடுக்கப்போவதாக என்னை வைத்து ஆடிஷன் நடத்திய ஒரு தமிழ் இயக்குநர் மிகவும் அருவருப்பாக நடந்துகொண்டார்’ என்கிறார் கபாலி’ நாயகி ராதிகா ஆப்தே.

உடை உடுத்துவதில் மட்டுமின்றி ஒளிவு மறைவின்றிப் பேசுவதிலும்  சமர்த்து நடிகை ராதிகா ஆப்தே. நேற்று வட இந்திய சானல் ஒன்றின் டாக் ஷோவில் கலந்துகொண்ட அவர் தமிழ் சினிமாவில் தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்துப்பேசினார். அப்போது அவர் கூறியதாவது... ‘இது நடந்து சில வருடங்கள் ஆகிறது. அன்றுதான் லண்டனில் இருந்து திரும்பியிருந்தேன். மும்பையில் குப்பை லாட்ஜ் ஒன்றில் ரூம் போட்டிருந்த ஒரு தமிழ் டைரக்டர் என்னை ஆடிஷனுக்கு அழைத்திருந்தார்.

படத்தின் கதாநாயகன் விக்ரம் என்றும், தான் இயக்கவிருப்பது பிரம்மாண்டமான சரித்திரப்படம் என்றும் அந்த.......[கெட்டவார்த்தை]  கூறினான். அவன்  பெயர் நினைவுக்கு வரவில்லை. அவன் வரவழைத்த அறையில் ஒரு டெயிலர் உட்பட சுமார் பத்துப்பேர் வரை இருந்தார்கள். பீரியட் படம் என்பதாகக் கூறி ப்ளவுஸ் என்ற பெயரில் எல்லாம் தெரிகிற அளவுக்கு ஒன்றைக்கொடுத்தார்கள். அந்த டைரக்டரும்  மொத்தக் குழுவினரும் மகா மட்டமான உடைகள் கொடுத்து டான்ஸ் மூவ்மெண்டுகளை சொல்லிக்கொடுத்தபடி புகைப்படங்களை எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரத்திலேயே அவர்கள் மட்டமான ஆசாமிகள் என்பதைப்புரிந்துகொண்டேன்.

அன்று இரவு நான் ஓட்டலில் தங்கவேண்டும் என்று அந்த டைரக்டர் எதிர்பார்த்தான். அவர்களின் தவறான நோக்கம் புரிந்ததும் ‘அன்று இரவு’ தங்கமுடியாது என்று கூறி தப்பி ஓடிவந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். கடைசியில் அப்படி ஒரு படம் நடக்கவே இல்லை. அவர்கள் எடுத்த புகைப்படங்கள் என்ன ஆனது என்று தெரியவில்லை. ஒருவேளை சில மாதங்களுக்கு முன் இணையங்களில் எனது வெளியான எனது ஆபாசப்படங்கள் அவர்கள் எடுத்ததாகக்கூட இருக்கலாம்.’ என்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'கையெடுத்து கும்புடுறேன்;இப்படி செய்யாதீர்கள்' - ஸ்ரீலீலா மனம் திறந்து வேண்டுகோள்!
9-ல் 8 படங்கள் தோல்வி.. பான் இந்தியா ஸ்டார் தான் கடைசி நம்பிக்கை!