
தானும் தனது காதல் கணவரும் அரசியலில் குதித்து முறையே இந்தியப் பிரதமராகவும் அமெரிக்க அதிபராகவும் ஆக விரும்புவதாக ‘தமிழன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பிரியங்கா சோப்ரா கொஞ்சமும் கூச்சநாச்சமில்லாமல் பேட்டியளித்திருக்கிறார்.
இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்குபவர் பிரியங்கா சோப்ரா. தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் நடித்தவர். ஹாலிவுட்டுக்கு சென்று ஆங்கில படங்களிலும் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று மண மக்களை வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் பிரியங்கா டைம்ஸ் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தனக்கு இந்திய பிரதமராக ஆவதற்கு விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
‘நாங்கள் இருவருமே மாற்றத்தை விரும்புபவர்கள். அதை எங்களால் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். எங்கள் இருவருக்கும் இப்போது உடனே அரசியலில் நுழையும் திட்டம் இல்லை. ஆனால் உயர் பதவிகளில் அமர்ந்து மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. எனவே அடுத்த சில ஆண்டுகளில் இருவருமே அரசியலில் குதித்து இந்தியப் பிரதமர், அமெரிக்க அதிபர் பதவிகளில் அமர்வோம்’என்று குறிப்பிட்டுள்ளார். இச்செய்தியை டைம்ஸ் இதழ் நகைச்சுவைப் பகுதியில் வெளியிடாததால் செய்தியை சீரியஸாக எடுத்துக்கொள்ளவும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.