’ராஜா கைய வச்சா அது ராங்காப் போனதில்ல’...இசைஞானிக்கு ஆதரவாக தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம்...

By Muthurama LingamFirst Published Jun 4, 2019, 6:05 PM IST
Highlights

பாடல்களின் காப்புரிமை தொடர்பாக இசைஞானி இளையராஜா மிகக் கடுமையாக நடந்துகொள்கிறார் என்று சிறுபான்மைக் கூட்டம் ஒன்று ராஜாவைத் தொடர்ந்து அவதூறு செய்துவரும் நிலையில் சென்னை உயர்நீதி மன்றம் ராஜமரியாதைக்குரிய தீர்ப்பு ஒன்று வழங்கியுள்ளது.

பாடல்களின் காப்புரிமை தொடர்பாக இசைஞானி இளையராஜா மிகக் கடுமையாக நடந்துகொள்கிறார் என்று சிறுபான்மைக் கூட்டம் ஒன்று ராஜாவைத் தொடர்ந்து அவதூறு செய்துவரும் நிலையில் சென்னை உயர்நீதி மன்றம் ராஜமரியாதைக்குரிய தீர்ர்ப்பு ஒன்று வழங்கியுள்ளது.

இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த அவரிடம் முறையான அனுமதி பெற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில்,  ராஜா பாடல்களை அவரது அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது என விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நிரந்தர தடையாக நீடித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்தாண்டு, தனது பாடல்களை தன்னுடைய முறையான அனுமதியில்லாமல் பயன்படுத்துக்கூடாது. அனுமதி பெறாமல் பாடல்களை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இளையராஜா அறிக்கை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகி மியூசிக் இசை நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அப்போது வழக்கை விசாரித்து இளையாராஜா பாடல்களை அவருடைய அனுமதியில்லாமல் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் 

அதை தொடர்ந்து இந்த வழக்கின் மீது விரிவான விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் இன்று வெளியிடப்பட்ட உத்தரவில், இளையாராஜா இசையமைத்த பாடல்களை அவரது அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது. இளையாராஜாவின் பாடல்களை பயன்படுத்த அவரிடம் முறையான அனுமதி பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜா கைய வச்சா அது ராங்காப் போனதுண்டோ.

click me!