இஸ்லாத்துக்கு மாறிட்டாராம்...நடிகை பிரியா ஆனந்த் கிட்ட இனிமே ரம்ஜானுக்கு பிரியாணி கேக்கலாம்?...

By Muthurama LingamFirst Published May 13, 2019, 3:20 PM IST
Highlights

படங்களில் இஸ்லாமிய கெட் அப்பில் நடித்தால் அந்த நடிகர், நடிகைகளை நெட்டிசன்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றிவிடும் வரிசையில் சும்மா நோன்பு இருக்க முயற்சித்த நடிகை பிரியா ஆனந்தும் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக புரளி கிளப்பிவருகிறார்கள். இச்செய்தியை பிரியா ஆனந்த் மறுத்துள்ளார்.

படங்களில் இஸ்லாமிய கெட் அப்பில் நடித்தால் அந்த நடிகர், நடிகைகளை நெட்டிசன்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றிவிடும் வரிசையில் சும்மா நோன்பு இருக்க முயற்சித்த நடிகை பிரியா ஆனந்தும் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக புரளி கிளப்பிவருகிறார்கள். இச்செய்தியை பிரியா ஆனந்த் மறுத்துள்ளார்.

‘எதிர்நீச்சல், ‘வணக்கம் சென்னை’, ‘வை ராஜா வை’ படங்களிலும் ஒரு சில இந்திப்படங்களிலும்  நடித்த பிரியா ஆனந்த் இடையில் சிலகாலம் நடிக்காமல் இருந்தார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘எல்கேஜி’ படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இப்போது புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார். கூடவே ரம்ஜான் நோன்பு இருக்கிறார். இந்து மதத்தை சேர்ந்த பிரியா ஆனந்த் ரமலான் நோன்பு இருப்பது பரபரப்பானது. சும்மாவே நடிகர்களை மதம் மாற்றுபவர்கள் நோன்பு இருந்தால் விடுவார்களா? பிரியா ஆனந்த் இஸ்லாம் மதத்திற்கு மாறியே விட்டார் என்று செய்திகள் படுவேகமாய்ப் பரவின.

அச்செய்திகளை படித்து துணுக்குற்ற பிரியா ‘அடிப்படையில் நான் இந்து. அதற்காக இந்து கடவுளை மட்டுமே கும்பிடுபவள் அல்ல. எனக்கு எம்மதமும் சம்மதம்தான். சர்ச்சுக்குப் போவேன், தர்காவுக்குப் போவேன். அதேபோல எனக்கு பிடித்த எல்லா கோயில்களுக்கும் போவேன். நம்மை மீறிய ஒரு சக்தி இந்த உலகத்தில் இருப்பதாகவே உணர்கிறேன்.

மற்றபடி குறிப்பிட்ட ஒரு கடவுளின்மீது அதீத பக்தி எல்லாம் கிடையாது. இந்த வருடம் ரம்ஜான் நோன்பு ஆரம்பித்ததிலிருந்து இப்போது வரை அதற்கான சாராம்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துகொள்ள முயற்சி செய்து வருகிறேன். நோன்பையும் என்னால் எவ்வளவு தூரம் கடைப்பிடிக்க முடியுமோ அவ்வளவு முயற்சிசெய்து கடைப்பிடித்து வருகிறேன். ஒரு மனிதனாய்ப் பிறந்தவன், முடிந்த அளவுக்கு மக்களின் நம்பிக்கைகளையும் மதித்து கடைப்பிடிக்க வேண்டும் என நினைக்கிறேன். அதனால்தான் இந்த முயற்சி’என்று விளக்கமளித்திருக்கிறார்.

பிரியா இஸ்லாம் மதத்திற்கு மாறினால் ரம்ஜான் சமயங்களில் அவரிடம் பிரியாணி கேட்டு டார்ச்சர் பண்ணலாம் என்று கனவு கண்டவர்களின் நம்பிக்கையில் மண் விழுந்திருக்கிறது.
 

click me!