
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் 'தர்பார்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் கடத்த ஏப்ரல் மாதம் தொடங்கி தற்போது பரபரப்பாக நடைபெற்றுகொண்டிருக்கிறது.
இந்த படத்தில், பிரபல பாலிவுட் நடிகர் 'தாலிப் தஹில்' இணைந்துள்ளார். இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,அமீர்கானுடன், இணைந்து நடித்த Aatank Hi Aatank என்கிற படத்தில் நடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 24 வருடங்களுக்குப் பின் மீண்டும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. பல வருடங்களுக்கு பின் அவரை பார்த்தாலும், தற்போதும் அவர் 25 வயது இளைஞர் போல் தோற்றம் அளிக்கிறார் என கூறியுள்ளார்.
தாலிப் தஹில், நயன்தாரா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் நடிக்கும் காட்சி தற்போது படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.