
பிரபல தெலுங்கு நடிகை பூனம் கவுர், சில ஊடகங்கள் தன் மீது அவதூறு பரப்பி வருவதாக காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
நடிகை பூனம், தெலுங்கு நடிகையாக இருந்தாலும் தமிழில், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில், வெளியான நெஞ்சிருக்கும் வரை படத்தின் மூலம் அறிமுகமாகி, தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர். இந்த படத்தை தொடர்ந்து, உன்னைப்போல் ஒருவன், பயணம், உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
தற்போது ஹைதராபாத்தில் வசித்து வசித்து வரும் இவர், காவல் நிலையத்தில் புகார் ஒன்றரை கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கொடுத்துள்ள புகாரில், கடந்த சில நாட்களாக தன்னை பற்றி அவதூறு பரப்பும் வகையில் சிலர் தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும். இது குறித்து போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பூனம், "இந்த சம்பவத்திற்கு பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது. கடந்த இரு ஆண்டுகளாக என்னை நடிக்க விடாமல் பல்வேறு தகவலைகளை பரப்பி வருபவர்கள். இது குறித்து உரிய ஆதாரத்தோடு புகார் கொடுத்துள்ளேன்.
தனக்கு நேர்ந்தது போல் வேறு எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாது என நினைக்கிறேன். அரசியல் செயல்திட்டங்களுக்கு சிலர் அதைச் செய்தனரா என எழுப்ப பட்ட கேள்விக்கு அது எனக்கு தெரியாது, போலீசார் தான் கண்டு பிடிக்க வேண்டும் என கூறினார்.
நடிகரும், அரசியல் தலைவருமான பவன் கல்யாண் பற்றி, பூனம் கவுர் விமர்சித்து பேசியதற்காக, பவன் கல்யாண் ரசிகர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.