
‘இந்தியன் 2’ படம் டிராப் ஆகிவிட்டதாக வாரம்தவறாமல் செய்திகள் வரிசை கட்டி நிற்கும் நிலையில்’சினிமா தொழிலையே விட்டுட்டேன்’ என்ற கமலின் தேர்தல் பிரச்சார வீடியோ ஒன்று அப்படக்குழுவின் அடி வயிற்றைக் கலக்கியுள்ளது.
தொடர்ந்து கிளம்பிய சர்ச்சைகளால் சமீபத்தில் அதிக சொல்லடிக்கு ஆளான படம் ‘இந்தியன் 2’. காரணம் படத்தின் வில்லனாக மாறிய நாயகன் கமலின் அரசியல் பிரவேசம். தேர்தலில் முழு வீச்சில் ஈடுபட்ட கமல் இப்படத்திற்கு ஒரு வாரம் மட்டுமே கால்ஷீட் கொடுத்திருந்த நிலையில் படம் அப்படியே கிடப்பில் போடப்பட, ’இனி எப்ப கமல் வந்து எப்ப படம் முடிய?’என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு படம் டிராப் ஆனதாகவே கருதப்பட்டது.
இன்னொரு பக்கம் ஒரு வாரம் கூட படப்பிடிப்பு நடக்காத நிலையில் படத்தின் பட்ஜெட் குறித்து பயந்த லைகா நிறுவனம் இயக்குநர் ஷங்கரிடம் ஏகப்பட்ட நிபந்தனைகள் போட்ட ஒப்பந்தங்களில் தொடர்ந்து கையெழுத்து வருவதாகத் தெரிகிறது.
கமல் கட்சி எப்படியும் டெபாசிட் கூட வாங்கப்போவதில்லை. அதனால் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் பொறுப்பாய் வந்து ‘இந்தியன் 2’ வை கமல் முடித்துத் தருவார் என்று இத்தனை பிரச்சினைகளுக்கும் மத்தியில் ஷங்கர் நம்பிக்கொண்டிருக்க நேற்று வெளியிட்ட தேர்தல் பிரச்சார வீடியோவில் ‘நான் உசுரா மதிச்ச சினிமாவை வேணாம்னு விட்டுட்டு வந்திருக்கேன்’ என்று கமல் மிக உணர்ச்சிகரமாகப் பேசியிருப்பது ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர்களைக் கதிகலங்க வைத்திருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.