
பாலிவுட் - டோலிவுட் என மாறி மாறி ஹிட் படங்களையும், முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்து வரும், புட்ட பொம்மா நடிகை பூஜா ஹெக்டே, திடீர் என தன்னுடைய சமூக வலைதள பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக கூறி அதிர்ச்சி தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
திரையுலகில் உள்ள பல பிரபலங்களின், சமூக வலைதள பக்கங்கள் அவ்வப்போது ஹேக் செய்யப்படுவதாக, தொடந்து பலர் கூறி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் கூட நடிகை குஷ்பு தன்னுடைய சமூக வலைத்தளம் ஹேக் செய்யப்பட்டு விட்டது அதனை எப்படி மீட்டெடுக்க வேண்டும் என்பதை யாரவது சொல்லுங்கள் என தன்னுடைய ரசிகர்களிடமே உதவி கேட்டார் என்பது நாம் அறிந்தது தான்.
அந்த வரிசையில் தற்போது தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ’முகமூடி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை பூஜாஹெக்டே இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மிகவும் பரபரப்பான தகவல் வெளியிட்ட இவர் ஹேக் செய்யப்பட்ட தன்னுடைய சமூக வலைதள பக்கத்தை மீட்க டிஜிட்டல் டீம் போராடி வருவதாகவும் எனவே அதிலிருந்து வரும் எந்த அழைப்பையும் யாரும் ஏற்க வேண்டாம் என்றும் அந்தக் கணக்கில் இருந்து யாராவது தகவல் கேட்டால் ரசிகர்கள் யாரும் பதிலளிக்க வேண்டாம் என தெரிவித்தார்.
இதை தொடர்ந்து தன்னுயடை டிஜிட்டல் டீம், வெற்றிகரமாக ஹேக் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தை மீட்டெடுத்து விட்டனர் என நிம்மதி பெருமூச்சு விட்டபடி மற்றொரு தகவலை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார். வெற்றிகரமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை விரைந்து மீட்ட குழுவினருக்கும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.