பாம்பு டாட்டூ குத்தி பதற வைத்த ஓவியா..! வேற இடமே கிடைக்கல போல... வைரலாகும் வீடியோ!!

Published : Dec 02, 2021, 08:00 PM IST
பாம்பு டாட்டூ குத்தி பதற வைத்த ஓவியா..! வேற இடமே கிடைக்கல போல... வைரலாகும் வீடியோ!!

சுருக்கம்

நடிகை ஓவியா குத்தி இருக்கும் டாட்டூ வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

நடிகை ஓவியா குத்தி இருக்கும் டாட்டூ வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழில் “களவாணி”, “கலகலப்பு”, “மெரினா”, “மூடர்கூடம்”, “மத யானைக்கூட்டம்” போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஓவியா. விஜய் தொலைக்காட்சி முதன் முதலில் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கிய ஓவியா சினிமாவை விட அந்த நிகழ்ச்சி மூலமாக தான் பட்டி, தொட்டி எல்லாம் பேமஸ் ஆனார்.  யாரைப் பற்றியும் கவலைப்படாத குணமும், மார்னிங் டான்ஸும் ஓவியாவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே ஆரம்பித்துக் கொடுத்தது. முதன் முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு ஆர்மி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியதே ஓவியா ரசிகர்கள் தான்.

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் ஓவியா, நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கே டப் கொடுக்கும் அளவிற்கு படங்களில் பிசியாக வலம் வருவார் என நினைத்தார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இருந்தாலும் ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத ஓவியா அவ்வப்போது தனது போட்டோஸை வெளியிட்டு அவர்களை மகிழ்வித்து வருகிறார். குறிப்பாக ஓவியா டாட்டூ தெரிய  வெளியிடும் போட்டோஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாவது வழக்கம்.

சமீப காலமாக புதிதாக ஒருவரை ஓவியா காதலித்து வருவதாக கூறப்பட்டது. அவருடன் சேர்ந்து அவ்வப்போது வெளியில் செல்வது மட்டும் இன்றி முத்தமழை புகைப்படங்களையும் வெளியிட்டு கிளுகிளுப்பேற்றினார்.

மேலும் எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் கிடைக்காததால் வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். தீவிர பட வாய்ப்பையும் பெற முயற்சித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் தன்னுடைய காலில் பாம்பின் டாட்டூ ஒன்றை போட்டுள்ளார். இதை பார்த்து நெட்டிசன்கள் பலர் டாட்டூ குத்த வேறு இடமே கிடைக்கவில்லையா என கிண்டலாக கேட்டு வருகிறார்கள்.

இந்த வீடியோ தற்போது வைரலாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Netflix Pandigai : 2026-ல் ஒரு டஜன் தமிழ் படங்களை வாங்கிக் குவித்த நெட்பிளிக்ஸ்... என்னென்ன படங்கள் தெரியுமா?
கிரேட் எஸ்கேப்... ராஜா சாப் படத்தின் பர்ஸ்ட் சாய்ஸ் ‘இந்த’ தமிழ் நடிகரா? - நல்ல வேளை அவர் நடிக்கல..!