லெஸ்பியனாக நடித்த நித்யா மேனன்... சர்ச்சையை கிளப்பிய லிப் லாக் காட்சி...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jul 15, 2020, 02:03 PM IST
லெஸ்பியனாக நடித்த நித்யா மேனன்... சர்ச்சையை கிளப்பிய லிப் லாக் காட்சி...!

சுருக்கம்

முன்னணி நடிகையாகவே இருந்தாலும் பட வாய்ப்பிற்காக துளிகூட கவர்ச்சி காட்டாதவர் நித்யா மேனன். 

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். தமிழில் வெப்பம், மெர்சல், ஓ காதல் கண்மணி, 24 உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தமிழில் கடைசியாக நித்யா மேனன் சைக்கோ படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஓவர் கிளாமர் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என அடம்பிடிக்கும் நித்யா மேனன், வெப் சீரிஸ் ஒன்றிற்காக எடுத்துள்ள ரிஸ்க் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 

 

இதையும் படிங்க: கண்ணீர் விட்ட அமலா பால்... “இதற்கு வேறு வழியில்லையா” என கதறல்... காரணம் இது தான்...!!

சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான பிரீத் இன் டூ த ஷேடோஸ் என்ற வெப் தொடரில் நித்யா மேனன் லெஸ்பியனாக நடித்துள்ளார். இந்த அதிர்ச்சி போதாது என்று ஸ்ருதி பாப்னா என்ற நடிகைக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது. காருக்குள் சுமார் 40 விநாடிகள் முத்தம் கொடுப்பது எடுக்கப்பட்டுள்ள இந்த காட்சி சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதுமட்டுமின்றி இருவரும் டிரஸை கழட்டுவது போன்றும், கட்டி அணைப்பது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

 

இதையும் படிங்க: “என் புருஷனை ஏன் வச்சிட்டு இருக்க”... வனிதாவை சகட்டுமேனிக்கு வறுத்தெடுத்த பீட்டர் பால் முதல் மனைவி.....!

முன்னணி நடிகையாகவே இருந்தாலும் பட வாய்ப்பிற்காக துளிகூட கவர்ச்சி காட்டாதவர் நித்யா மேனன். அதுமட்டுமின்றி தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அவர் வெப் சீரிஸில் இப்படிப்பட்ட காட்சிகளில் நடித்துள்ளது ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளது. ஓடிடி தளத்திற்கு சென்சார் இல்லை என்பதால் உங்க இஷ்டத்துக்கு எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம் என நடிக்கிறீர்களா? என நித்யா மேனனுக்கு கண்டனம் குவிந்து வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இன்னும் 100 நாளில் சம்பவம் இருக்கு... கவுண்ட் டவுன் உடன் வெளிவந்த டாக்ஸிக் அப்டேட்
பாக்ஸ் ஆபிஸ் ‘பாட்ஷா’ ரஜினிகாந்த் நடித்து அதிக வசூல் அள்ளிய டாப் 7 மூவீஸ் ஒரு பார்வை