கமிஷனர் அலுவலகத்தில் பாலியல் புகார் கொடுக்க வந்த ‘போலீஸ் கமிஷனர்’ நடிகை...’நிர்வாணப்படத்தை வச்சுக்கிட்டு மிரட்டுறான் சார்’...

Published : Jun 20, 2019, 02:28 PM IST
கமிஷனர் அலுவலகத்தில் பாலியல் புகார் கொடுக்க வந்த ‘போலீஸ் கமிஷனர்’ நடிகை...’நிர்வாணப்படத்தை வச்சுக்கிட்டு மிரட்டுறான் சார்’...

சுருக்கம்

போலீஸ் உதவி கமி‌ஷனர் சீருடையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து பேசி பரபரப்பை உண்டாக்கிய சின்னத்திரை நடிகை நிலானி வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் தனக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை தருவதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.  

போலீஸ் உதவி கமி‌ஷனர் சீருடையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து பேசி பரபரப்பை உண்டாக்கிய சின்னத்திரை நடிகை நிலானி வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் தனக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை தருவதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சினிமா மற்றும் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருப்பவர் நடிகை நிலானி. இவருக்கும் சின்னத்திரை உதவி இயக்குனரான காந்திக்கும் காதல் இருந்து வந்தது. இந்த நிலையில் காந்தி திடீரென கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு நடிகை நிலானிதான் காரணம் என்று பரபரப்பான தகவல் வெளியானதைத் தொடர்ந்து  மனமுடைந்த நிலானி வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவர் உயிர் பிழைத்தார்.

பின்னர் சில மாதங்களாக இருக்கிற இடம் தெரியாமல் இருந்து வந்த நிலானி தற்போது மீண்டும் பாலியல் சர்ச்சை ஒன்றுடன் மீண்டும் பரபரப்புக்கு ஆளாகியுள்ளார். இது தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் அவர் கொடுத்துள்ள புகாரில்,..கடந்த ஆண்டு என்னை பற்றி பரபரப்பான செய்திகள் வெளியான நேரத்தில் எனது செல்போன் எண்களும் வெளியானது. அப்போது பலர் என்னிடம் போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் அளிக்கும் வகையில் பேசினர். ஒரு சிலர் ஆபாசமாகவும் பேசினர்.அந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து பேசுவதாக கூறி மஞ்சுநாதன் என்பவர் என்னிடம் பேசினார். தனக்கு திருமணம் ஆக வில்லை என்றும், இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறினார். அதற்கு நானும் சம்மதித்தேன்.  பின்னர் அடிக்கடி போனில் பேசினோம். நேரிலும் சந்தித்தோம். 

ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு அவருக்கு திருமணம் ஆகி மனைவி இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டதால் நான் அவரை திருமணம் செய்ய முடியாது என்று கூறிவிட்டேன். இதனால் ஆத்திரம் அடைந்த மஞ்சுநாதன் உன்னை ஆபாசமாக படம் எடுத்து வைத்துள்ளேன் என்று மிரட்டுகிறார். நான் சொல்வது போல் கேட்காவிட்டால் உனது ஆபாச படங்களை இணைய தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.  போனில் பேசும் போது எனது விருப்பத்திற்கு மாறாக ஆபாசமாக பேசுகிறார். அவரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே போலீசார் என்னை மிரட்டும் மஞ்சுநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான நிலானி அடிக்கடி இதுபோன்ற பாலியல் சர்ச்சைகளில் சிக்குவது குறிப்பிடத்தக்கது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அய்யய்யோ மீனா கண்டுபிடிச்சிட்டாளே... சீட்டிங் பண்ணி சிக்கிய ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
அஞ்சானை அரெஸ்ட் பண்ண உத்தரவா? கைது நடவடிக்கை பற்றி உண்மையை போட்டுடைத்த லிங்குசாமி