கணவர் ஆர்யாவுடன் செம்ம மார்டனாக நைட் அவுட் சென்ற சாயிஷா! அவரே வெளியிட்ட புகைப்படம்!

Published : Jun 20, 2019, 01:28 PM IST
கணவர் ஆர்யாவுடன் செம்ம மார்டனாக நைட் அவுட் சென்ற சாயிஷா! அவரே வெளியிட்ட புகைப்படம்!

சுருக்கம்

நடிகை சாயிஷா  திருமணத்தை தொடர்ந்தும், சமந்தா பாணியை பின்பற்றி வருகிறார்.  குறிப்பாக நடிகை சமந்தா கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடிப்பது போலவே, சாயிஷாவும் தற்போது கணவர் ஆர்யாவுடன் சேர்ந்து, டெடி என்கிற படத்தில் நடித்து வருகிறார்.  

நடிகை சாயிஷா  திருமணத்தை தொடர்ந்தும், சமந்தா பாணியை பின்பற்றி வருகிறார்.  குறிப்பாக நடிகை சமந்தா கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடிப்பது போலவே, சாயிஷாவும் தற்போது கணவர் ஆர்யாவுடன் சேர்ந்து, டெடி என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக இருவரும் வெளிநாடு சென்றுள்ளார். அப்போது கணவர் ஆர்யாவுடன், நைட் அவுட் சென்ற புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் சாயிஷா.

இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் உருவான 'கஜினிகாந்த்' படத்தில் நடிகை சாயிஷாவுடன், இணைந்து நடித்தார் ஆர்யா.  அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.  இந்த காதல் தற்போது திருமணத்தில் முடிவடைந்துள்ளது.

திருமணத்துக்கு முன்னரே இவர்கள், இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கியத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான், சாயிஷா கதாநாயகியாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளார். 

இந்நிலையில் இவர்கள் இருவரும்,  இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில்,  ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் 'டெடி' படத்தில்  மீண்டும் இணைந்து நடித்து வருகின்றனர்.  இந்த படத்தின் படப்பிடிப்பு  தற்போது அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் சென்றுள்ள இருவரும் டின்னருக்காக நைட் அவுட் சென்றபோது எடுத்துக்கொண்ட புகைப்பததை சாயிஷா வெளியிட்டுள்ளார். 

அந்த புகைப்படம் இதோ:

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார் - அவர் இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா?
மாற்றப்படும் பராசக்தி ரிலீஸ் தேதி... ஜனநாயகனை காலி பண்ண என்னென்ன பண்றாங்க பாருங்க..!