ரகசிய நிச்சயதார்த்தம்! உண்மையை போட்டுடைத்த நடிகை ரெஜினா!

Published : Jun 20, 2019, 02:20 PM IST
ரகசிய நிச்சயதார்த்தம்! உண்மையை போட்டுடைத்த நடிகை ரெஜினா!

சுருக்கம்

தமிழில் 'கண்ட நாள் முதல்' படத்தின்  மூலம் அறிமுகமானவர் நடிகை ரெஜினா கசான்ட்ரா. ஆனால் இவரை ரசிகர்களிடம் அடையாளப்படுத்தியது என்றால், அது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படம் எனலாம்.  

தமிழில் 'கண்ட நாள் முதல்' படத்தின்  மூலம் அறிமுகமானவர் நடிகை ரெஜினா கசான்ட்ரா. ஆனால் இவரை ரசிகர்களிடம் அடையாளப்படுத்தியது என்றால், அது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படம் எனலாம்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திரமௌலி, மாநகரம், சிலுக்குவார் பட்டி சிங்கம், ஆகிய படங்களில் நடித்தார்.  இவர் நடிப்பில் விரைவில் 'பார்ட்டி' திரைப்படம் வெளியாக உள்ளது.  சிம்புதேவன் இயக்கும் 'கசட தபர' படத்தில் நடித்து வருகிறார்.

இவர் தமிழில் மட்டும் அல்லது, தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். அதே போல் பாலிவுட் படத்திலும் நடித்துள்ளார்.  இந்நிலையில் நடிகை ரெஜினாவுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தெலுங்கு பட திரையுலகில் ஒரு தகவல் பரவி வருகிறது.  

இந்த ரகசிய நிச்சயதார்த்தத்தில் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டதாகவும்,  தன் கைவசம் உள்ள படங்களை நடித்து முடித்துவிட்டு திருமண வாழ்வை ரெஜினா துவங்க உள்ளதாகவும் ஒரு கூறப்பட்டது. 

இந்த தகவல் வெளியானதில் இருந்து நடிகை ரெஜினாவின் தரப்பிலிருந்து எந்த ஒரு தகவலும் வெளியாகாததால், இது உண்மையாக இருக்கலாம் என சமூக வலைத்தளத்தில் பலர் கூறி வந்தனர். 

இந்நிலையில் இந்த நிச்சயதார்த்த விவகாரம் குறித்து, நடிகை ரெஜினா வெளிப்படையாக கூறியுள்ளார். "இதுகுறித்து அவர் கூறுகையில் இது ஒரு ஆதாரமே இல்லாமல் எழுந்த வதந்தி. எனக்கு நிச்சயதார்த்தம் எதுவும் நடந்து விடவில்லை. தற்போது படங்கள் நடிப்பதில் பிஸியாக இருக்கிறேன் என கூறி, தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகத்தில் தீயாக பரவிய வதந்திக்கு முற்று புள்ளி வைத்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!