நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது..! நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை..!

Published : Sep 26, 2020, 05:30 PM IST
நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது..! நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை..!

சுருக்கம்

குழந்தை முதல் பெரியவர்கள் வரை தன்னுடைய இனிமையான குரலால் கட்டி போட்டு, தாலாட்டும் இசையில் பல பாடல்களை பாடிய  பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் ஒரே அடியாக உறங்க சென்று விட்டார். அவர் இனி இல்லை என்பதை மனம் ஏற்க மறுத்தாலும், அதுவே உண்மை.  

குழந்தை முதல் பெரியவர்கள் வரை தன்னுடைய இனிமையான குரலால் கட்டி போட்டு, தாலாட்டும் இசையில் பல பாடல்களை பாடிய  பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் ஒரே அடியாக உறங்க சென்று விட்டார். அவர் இனி இல்லை என்பதை மனம் ஏற்க மறுத்தாலும், அதுவே உண்மை.

இவருடைய மறைவிற்கு பல கோடி ரசிகர்கள், சமூக வலைத்தளம் மூலமும் நேரடியாகவும் வந்து தங்களுடைய அஞ்சலியை செலுத்திய நிலையில், நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டு தன்னுடைய இரங்கலையும், எஸ்.பி.பி குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறியுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தெய்வீகக்‌ குரல்‌ இனி இல்லை என்பதை நினைக்கும்‌ போதே நெஞ்சம்‌ பதறுகிறது. தலைமுறைகளை தாண்டி நம்மை மகிழ்வித்த திரு எஸ்பி பாலசுப்ரமணியம்‌ சாருடைய குரல்‌, நம்முடைய எல்லா காலங்களுக்கும்‌, காரணங்களும்‌ பொருந்தி இருக்கும்‌.

நீங்கள்‌ இனி இல்லை என்பதை மனம்‌ நம்ப மறுக்கிறது... ஆயினும்‌ உங்கள்‌ குரல்‌ என்றென்றும்‌ நீங்கா புகழுடன்‌ இருக்கும்‌. உங்களுக்கு அஞ்சலி செலுத்தி, எங்களுக்கு நாங்களே ஆறுதல்‌ சொல்லிக்‌ கொள்ளும்‌ இந்த நேரத்தில்‌ கூட உங்கள்‌ பாடல்‌ மட்டுமே பொருந்துகிறது. எங்கள்‌ வாழ்வில்‌ உங்களின்‌ ஆளுமை அப்படி. நீண்ட காலமாக இடைவிடாமல்‌ உழைத்து எங்களை மகிழ்வித்த உங்களுக்கு மனம்‌ இல்லாமல்‌ பிரியா விடை கொடுக்கிறோம்‌. பாடும்‌ நிலா விண்ணிலிருந்து பாடட்டும்‌. உங்களை பிரிந்து வாடும்‌ உங்கள்‌ குடும்பத்தாருக்கும்‌, நண்பர்களுக்கும்‌, உங்கள்‌ திரை உலக சகாக்களுக்கும்‌, உலகெங்கும்‌ பரவி இருக்கும்‌ உங்கள்‌ எண்ணற்ற ரசிகர்களுக்கும்‌ என்‌ மனமார்ந்த ஆறுதல்‌ செய்தி இது... இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Thalaivar Thambi Thalaimaiyil: பாக்ஸ் ஆபீஸ்ல இனி தம்பியோட ஆட்டம் தான்! மிரள வைக்கும் 10 நாள் வசூல் நிலவரம்!
Pandian Stores 2 Promo: சக்திவேலின் திட்டம் பலித்தது! பாண்டியன் குடும்பத்தில் வெடித்த புது பஞ்சாயத்து! பாண்டியன் ஸ்டோர்ஸில் இனி வரும் வாரங்கள் ரணகளம்!