என்னை ஏமாற்றி விட்டாயே பாலு... கே.ஜே.யேசுதாஸ் வேதனை..!

Published : Sep 26, 2020, 05:19 PM IST
என்னை ஏமாற்றி விட்டாயே பாலு... கே.ஜே.யேசுதாஸ் வேதனை..!

சுருக்கம்

முன்ஜென்மத்தில் நானும் எஸ்.பி.பி.,யும் சகோதரர்களாக இருந்திருக்கலாம். எஸ்.பி.பி முறையாக சங்கீதம் கற்கவில்லை

முன்ஜென்மத்தில் நானும் எஸ்.பி.பி.,யும் சகோதரர்களாக இருந்திருக்கலாம் என பாடகர் கே.ஜே.யேசுதாஸ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உடல் இன்று காலை காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது மறைவு குறித்து பாடகரான கே.ஜே.யேசுதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், ’’பாலுவும், நானும் ஒரு அம்மா வயிற்றில் பிறக்கவில்லை என்றாலும், அவர் என் உடன்பிறந்தவர் போன்றவர்.

முன்ஜென்மத்தில் நானும் எஸ்.பி.பி.,யும் சகோதரர்களாக இருந்திருக்கலாம். எஸ்.பி.பி முறையாக சங்கீதம் கற்கவில்லை என்றாலும், அவருடைய ஞானம் பெரிது, பாடல்களை உருவாக்கவும் செய்வார், பாடவும் செய்வார்.  எல்லோரிடமும் அன்பாக பழககூடியவர், யார் மனதையும் புண்படுத்தமாட்டார், நாங்கள் கடைசியாக இணைந்து பாடியது ஒரு சிங்கப்பூர் ப்ரோக்ராம்மில் தான். பாலு நோய் குணமாகி எப்போ வீடு திரும்புவார் என நான் அமெரிக்காவில் காத்துக்கொண்டிருந்தேன். கடைசி நேரத்தில் அவரை பார்க்கமுடியவில்லை, அந்த வருத்தம் எப்போதும் இருக்கும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.ஜே.யேசுதாஸும், எஸ்.பி.பாலசுப்ரமணியமும் இணைந்து பாடிய பல பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளன. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!