எவ்வளவு மோசம்..! சிரித்துக்கொண்டே...இரண்டாம் திருமணம் குறித்து பேசிய 'மைனா' நந்தினி..! 

 
Published : Jan 23, 2018, 05:34 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
எவ்வளவு மோசம்..! சிரித்துக்கொண்டே...இரண்டாம் திருமணம் குறித்து பேசிய 'மைனா' நந்தினி..! 

சுருக்கம்

actress nandhini talk about second marriage

நடிகை நந்தினி:

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் அருள்நிதி அறிமுகமான 'வம்சம்' திரைப்படத்தில் காமெடி நடிகையாக அறிமுகமானவர் நடிகை நந்தினி. இந்த படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தார் ஆனால் இவரால் வெள்ளித்திரையில் முழு நேர காமெடி நடிகையாக நீடிக்க முடியவில்லை.

சின்னத்திரையில் நந்தினி:

திரைப்படங்களில் நடிக்க சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால், பிரபல சின்னத்திரை தொலைகாட்சியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' என்கிற தொடரில் மீனாட்சியாக நடிக்கும் ரக்ஷிதாவின் தோழியாக காமெடி கலந்த ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

இதைத்தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் சமையல், நடனம், என பல நிகழ்சிகளில் கலந்துக்கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். மேலும் 'கலக்க போவது யாரு' என்கிற நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம்:

நந்தினி, ஜிம் நடத்தி வந்த தொழிலதிபர் கார்த்திக் என்பவரை காதலித்து பெற்றோரை மீறி திருமணம் செய்துக்கொண்டார். ஆரம்பத்தில் இவர்களுடைய திருமணத்தை எதிர்த்த நந்தினியின் பெற்றோர் பின் இவர்களை ஏற்றுக்கொண்டனர்.

திருமணமாகி ஒரு சில மாதங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கார்த்தியை விட்டு பிரிந்து தன்னுடைய அம்மா வீட்டிற்கு நந்தினி சென்ற போதுதான் அரங்கேறியது அந்த துயர சம்பவம்.

நந்தினியின் கணவர் கார்த்திக், தற்கொலை செய்துக்கொண்டார். இது குறித்து நந்தினியின் தரப்பில் இருந்தும்... கார்த்திக்கின் குடும்பத்தினர் தரப்பில் இருந்தும் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டது நாம் அறிந்தது தான்.

இரண்டாவது திருமணம்:

இந்நிலையில் நந்தினி கணவர் கார்த்திக் இறந்து ஒரு வருடம் கூட முழுமையாக ஆகாத நிலையில் இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. மேலும் நந்தினி நடன இயக்குனர் ஒருவரை காதலித்து வருவதாகவும் அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் கூறப்பட்டது. விரைவில் இவர்கள் திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகியது.

நந்தினி விளக்கம்:

தற்போது தன்னுடைய இரண்டாவது திருமணம் குறித்து முதல் முறையாக கூறியுள்ள நந்தினி... இந்த தகவலை நான் படித்ததும் எனக்கு சிரிப்பு தான் வந்தது. என்னுடைய சகோதரர் ஒரு நடன இயக்குனர் அவருடன் நான் சில சமயங்களில் ஷூட்டிங் வருவதை பார்த்து இப்படி ஒரு செய்தி பரவியுள்ளது. இதில் இருந்து அனைவருடைய பார்வையும் எவ்வளவு மோசமாக உள்ளது என்பது தெரிகிறது என மன வேதனையோடு கூறியுள்ளார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லிங்குசாமி கை*து ஆகல! அது தவறான செய்தி, சகோதரரும், வழக்கறிஞரும் சொன்ன முக்கிய தகவல்.....
48 ஆண்டுகால சினிமா பயண நினைவுகளில் ஸ்ரீனிவாசன்; அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!