அந்த வகையில் பிகில் இந்திரஜாவைத் தொடர்ந்து “வாத்தி கம்மிங் ஒத்து” பாடலுக்கு மாஸாக நடனமாடி டிக்-டாக் வீடியோ வெளியிட்டுள்ளார் நம்ம மைனா நந்தினி.
லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் முதல் முறையாக தயாராகியுள்ள படம் “மாஸ்டர்”. தளபதியின் 64வது படமான இதில் முதன் முறையாக விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்ற இரண்டாவது சிங்கிளான “வாத்தி கம்மிங்” பாடல் வெளியான புதிதில் புரியாத வார்த்தைகள் நிறைய இருந்ததால் யாருக்கும் பெரிதாக பிடிக்கவில்லை.
இதையும் படிங்க: அந்தரத்தில் தொங்கும் ஜாக்கெட்...ரகசிய இடத்தில் ஹாட் டாட்டூ...ஊரடங்கிலும் ஓவர் அலப்பறை செய்யும் யாஷிகா ஆனந்த்!
ஆனால் தனுஷ் சொல்லற மாதிரி கேட்க...கேட்க... ரசிகர்களுக்கு “வாத்தி கம்மிங்” பாடல் பிடிக்க ஆரம்பித்தது. தற்போது டிக்-டாக்கில் செம்ம பிரபலமாக இருக்கும் இந்த பாடலுக்கு நடனமாடி திரைப்பிரபலங்கள் பலரும் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் பிகில் இந்திரஜாவைத் தொடர்ந்து “வாத்தி கம்மிங் ஒத்து” பாடலுக்கு மாஸாக நடனமாடி டிக்-டாக் வீடியோ வெளியிட்டுள்ளார் நம்ம மைனா நந்தினி.
அட்ரா சக்க... கொரோனாவை தும்சம் செய்ய ஒன்றிணைந்த சூப்பர் ஸ்டார்கள்... வைரலாகும் மாஸ் வீடியோ...!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” சீரியல் மூலம் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தார். அந்த சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்ததால், அதில் அவரது கேரக்டர் பெயரான மைனாவையும் சேர்ந்து மைனா நந்தினி என்று அழைக்கப்படுகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் யோகேஷ்வரன், தம்பி பாலசுப்ரமணியன் ஆகியோருடன் சேர்ந்து மாஸ் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வாத்தி கம்மிங் பாட்டுக்கு குடும்பத்துடன் சேர்ந்து மைனா நந்தினி போட்ட ஆட்டம் இதோ...
@yogeshwaram_official @balasubramaniyanrajendran ❤️❤️😍❤️❤️vathi coming
A post shared by Nandhini Myna (@myna_nandhu) on Apr 6, 2020 at 7:18am PDT