
காமெடி நடிகர் விவேக் சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதர் என பல முறை நிரூபித்துள்ளவர். தன்னுடைய காமெடியான நடிப்பு மூலம் பல சமூக கருத்துக்களை வலியுறுத்தி, ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளவர்
சமீப காலமாக இவர், தான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை குறைத்து கொண்டு, டாக்டர் அப்துல் கலாம் கூறியபடி, அதிகப்படியான மர கன்றுகளை நட்டு வருவதை தவறாமல் செய்து வருகிறார்.
அந்த வகையில் இது வரை 10 லட்சத்திற்கும் அதிகமான மர கன்றுகளை விவேக் நட்டுள்ளார். மேலும் முடிந்த வரை பல சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இவர் நேற்று, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ ரசிகர்கள், மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றுள்ளது. இந்த வீடியோவில், ஒரு பெண், துப்புரவு தொழிலாளர் ஒருவருக்கு கால்களை கழுவி பாத பூஜை செய்கிறார்.
மேலும் பூமாலை, பண மாலை போட்டு அவரை வணங்கி... பூஜிக்கிறார். கொரோனாவின் கோர தாண்டவத்தில், மக்களின் நலனில் அக்கறை கொண்டு, பணியாற்றும் துப்புரவு தொழிலாளருக்கு ஒரு பெண் செய்துள்ள இந்த பூஜை பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.
இந்த வீடியோவை வெளியிட்டு... எங்கெங்கும் காணினும் சக்தியடா ... பாரதிதாசன் என கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார் விவேக்.. அந்த வீடியோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.