Minnal Deepa: வா மா மின்னல்.... தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு பின் ரீ-என்ட்ரி- உற்சாகத்தில் ‘மாயி’ பட நடிகை

Ganesh A   | Asianet News
Published : Nov 24, 2021, 08:24 PM ISTUpdated : Nov 24, 2021, 08:25 PM IST
Minnal Deepa: வா மா மின்னல்.... தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு பின் ரீ-என்ட்ரி- உற்சாகத்தில் ‘மாயி’ பட நடிகை

சுருக்கம்

20 ஆண்டு இடைவெளிக்கு பின் சசிகுமாரின் ராஜவம்சம் படம் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை மின்னல் தீபா. 

நடிகர் சரத்குமார் நடித்த, 'மாயி' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை தீபா. இப்படத்தில் வடிவேலு பெண் பார்க்க செல்லும் காட்சியின் போது ‘வா மா மின்னல்’ என வடிவேலு பேசுகிற டயலாக் மிகவும் பிரபலமானது. 

அந்த காட்சியில் மின்னல் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் தீபா. இந்த படத்திற்கு பின்னர் மின்னல் தீபா என்றே அழைக்கப்பட்டார். இதையடுத்து சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த இவர், பின்னர் சின்னத்திரை சீரியல்களில் கவனம் செலுத்தி வந்தார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ரமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட தீபா, கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இதையடுத்து கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் சுப்ரமணி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சுமார் 20 ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் மின்னல் தீபா. கதிர் இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ராஜவம்சம்’ படம் மூலம் அவர் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 26-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!