"என் ஆடையின் அளவை கணக்கிட யாருக்கும் உரிமை இல்லை"... தாறுமாறு கேள்வி கேட்ட நெட்டிசன்களுக்கு பிரபல நடிகையின் நெத்தியடி பதில்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Dec 18, 2019, 12:32 PM IST
"என் ஆடையின் அளவை கணக்கிட யாருக்கும் உரிமை இல்லை"... தாறுமாறு கேள்வி கேட்ட நெட்டிசன்களுக்கு பிரபல நடிகையின் நெத்தியடி பதில்...!

சுருக்கம்

தற்போது துபாயில் செட்டில் ஆகிவிட்ட மீரா நந்தன், அங்குள்ள புர்ஜ் கலிஃபா முன்பு நின்றிருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். சிவப்பு நிற குட்டை உடையில் போட்டோ போட்ட மீரா நந்தனை, நெட்டிசன்கள் சரமாரியான கேள்விகளால் துளைத்தெடுத்தனர். 

தமிழில் 'வால்மீகி', 'அய்யனார்', 'சூரிய நகரம்' போன்ற படங்களில் நடித்தவர் மீரா நந்தன். மலையாள நடிகையான இவர், தற்போது துபாயில் ஒளிபரப்பாகும் மலையாள எஃப் எம் ஒன்றில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வருகிறார். தற்போது துபாயில் செட்டில் ஆகிவிட்ட மீரா நந்தன், அங்குள்ள புர்ஜ் கலிஃபா முன்பு நின்றிருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். சிவப்பு நிற குட்டை உடையில் போட்டோ போட்ட மீரா நந்தனை, நெட்டிசன்கள் சரமாரியான கேள்விகளால் துளைத்தெடுத்தனர். 

'ஏன் இப்படி குட்டையான உடைகளை அணிகிறீர்கள்?', 'உங்களுக்கு பொருத்தமான உடைகளை போடுங்கள்' என சகட்டு மேனிக்கு அட்வைஸ் செய்தனர். சிலர் தேவையில்லாத ஆபாச கமெண்ட்களையும் பதிவிட்டனர். இதனால் கடுப்பான மீரா நந்தன், தன்னை விமர்சித்தவர்களுக்கு நெத்தியடி பதில் கொடுக்கும் விதமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

"சில நாட்களாக நான் பதிவிட்ட புகைப்படங்களுக்கு மிகவும் மோசமான கமெண்ட்கள் வந்து கொண்டிருக்கின்றன. நான் குட்டையாக உடை அணிந்திருப்பதாக யாரும் குறை கூற முடியாது. இது என் வாழ்க்கை, அதற்குள் நுழைய யாருக்கும் உரிமையில்லை. இந்திய மற்றும் மார்டன் உடைகளை எனக்கு மிகவும் பிடிக்கும். என் ஆடையின் அளவை கணக்கிடும் உரிமை யாருக்கும் கிடையாது. நான் அணிந்திருக்கு உடையை வைத்து, என்னை தீர்மானிப்பதையும், ஆபாசமாக கமெண்ட் செய்வதையும் நான் ஏற்றுக்கொள்ள முடியாது"  என சகட்டு மேனிக்கு வறுத்தெடுத்துள்ளார். 

சமூகவலைத்தளங்களில் போட்டோக்களை பதிவிடுவது தனிப்பட்ட மனிதர்களின் விருப்பம், அதில் தேவையில்லாமல் கருத்து கூறி வெறுப்பேற்றிய நெட்டிசன்களுக்கு மீரா நந்தன் சரியான பதிலடி கொடுத்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அடிபொலியாக இருந்ததா குற்றம் புரிந்தவன் வெப் சீரிஸ்...? முழு விமர்சனம் இதோ
துருப்புச்சீட்டாக மாறிய விசாலாட்சி! ஆதி குணசேகரனை காப்பாற்றுவாரா? கம்பி எண்ண வைப்பாரா? எதிர்நீச்சல் தொடர்கிறது